இந்தியாவில் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்

 அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுரை

வாசிங்டன், மே 3 இந்தியா முழுவதும் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரி யாக 3 லட்சம் பேருக்கு ஏற்பட்டு வந்த பாதிப்பு புதிய உச்சமாக நேற்று காலை வெளியான தகவலில் 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 1 ஆயிரத்து 993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டது. இதனால், இந்தியா வில் கரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப் படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வரும் சூழ்நிலையிலும் அந்த முயற்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. கரோனா அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்துகள் உள்ளிட்டவற்றிற்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலவி வருகிறது.

இந்நிலையில், கரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா வில் சில வாரங்களுக்கு முழு ஊர டங்கை அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக  அவர் கூறி யதாவது, வைரசை கட்டுப்படுத்தி விட்டதாக வெற்றி மிகவும் முன் கூட் டியே அறிவிக்கப்பட்டது. இப்போது நீங்கள் செய்ய வேண் டிய ஒன்று என்னவென்றால் ஊர டங்கை நீட்டிப்பது மற்றும் இந்தியா முழுமைக்கும் முழு ஊரடங்கை அமல் படுத்துவது. அது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.  உங்களுக்கு சிறிது அவகாசம் வேண்டு மென்றால் நான் கூறியது தான் வழி. உடனடி, இடை நிலை மற்றும் நீண்ட கரோனா பரவல் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட வேண்டும். தற்போது ள்ள மிகவும் முக்கிய மான விஷயம் என்பது உடனடி யாக ஆக்சிஜன் வசதியை ஏற்படுத் துவது, விநியோகிப்பது, மருந் துகளை ஏற்பாடு செய்வது, கவச உடைகளை ஏற்படுத் துவது, இது போன்ற நடவடிக் கைகள் மற்றொரு மிகவும் முக்கி யமான விஷயம் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்து வதாகும். முழுமையாக முழு ஊரடங்கை அமல்படுத்துவது தான் வைரஸ் பரவலை குறைக்க வழி. நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த யாரும் விரும்ப மாட்டார்கள். ஆறு மாதங்களாக நீங்கள் அதை செய்யும்போது அது ஒரு பிரச்சினை தான்.  ஆனால், ஒரு சில வாரங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்துவது கரோனா பரவலை கட்டுப்படுத் துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

Comments