கீழடி அகழாய்வில் சேதமுற்ற நிலையில் மண்பானை கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 3, 2021

கீழடி அகழாய்வில் சேதமுற்ற நிலையில் மண்பானை கண்டுபிடிப்பு

திருப்புவனம், மே3- சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. இங்கு முதலில் 2 குழிகள் தோண்டப்பட்டன. அதில் பாசி மணிகள், சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுக்கள் மற்றும் பானை ஓடுகள், சேதமுற்ற நிலையில் சிறிய பானைகள், மண்கிண்ணங்கள், பழங்கால மக்கள் பயன்படுத்திய கருப்பு கலர் உடைய மண் தட்டு மற்றும் குடிதண்ணீர் பானைக்கு கீழே வைக்கும் மண்ணால் ஆன பிரிமனை உள்பட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது மேலும் 2 குழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் 3ஆவது குழியில் சேதமுற்ற நிலையில் சுவர் பகுதியுடன் ஒட்டியுள்ள மண்பானை பகுதி கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் செய்யும் போது பானையின் வடிவம் பற்றி தெரியவரும். இதுவரை கீழடி பகுதியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி பணியில் அதிக அளவில் சிறிய - பெரிய பானைகள், மண் கிண்ணங்கள் கிடைத்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

No comments:

Post a Comment