உயிரிழக்கும் நோயாளிகளை எரியூட்டுவதில் சிக்கல் உ.பி. கங்கையில் மிதக்கும் உடல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 12, 2021

உயிரிழக்கும் நோயாளிகளை எரியூட்டுவதில் சிக்கல் உ.பி. கங்கையில் மிதக்கும் உடல்கள்

புதுடில்லி, மே 12  பீகாரை தொடர்ந்து உத்தர பிரதேச கங்கை நதியில் உடல்கள் மிதப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை கரோனா நோயாளிகளின் உடல்கள் என்று கூறப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் நாள்தோறும் 20,000 முதல் 30,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவருகிறது.

தினசரி 300 பேர் உயிரிழக் கின்றனர். அவர்களில் சிலரின்உடல்கள் கங்கை நதியில் வீசப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ள பிஹாரின் பக்சர் மாவட்ட கங்கை நதியில் நேற்று முன்தினம் உடல்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 150 முதல் 500 உடல்கள் மிதந்து சென்றதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர்.

பக்சர் மாவட்ட அதிகாரிகள் கூறும்போது, கங்கையில் மிதக்கும் உடல்களை மீட்டு எரியூட்டி  வருகிறோம். உடல்களை நதியில்வீசும் வழக்கம் பீகாரில் கிடையாது. உத்தர பிர தேசத்தின் வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் கங்கையில் வீசப்படும் உடல்கள் பீகாருக்கு அடித்து வரப்படுகின்றன என்றனர்.

71 உடல்கள் மீட்பு

பக்சர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்  நீரஜ் குமார் சிங் கூறும்போது, கங்கை நதியில் இருந்து இதுவரை 71 உடல்களை மீட் டுள்ளோம். அவை அழுகிய நிலையில் இருப்ப தால் நதிக் கரையோரம் உடல் பரிசோதனை நடத்தினோம் என்றார்.

உள்ளூர் வியாபாரி ராம் அஸ்ரே யாதவ் கூறும்போது, கங்கை நதியில் இருந்து மீட்கப் படும் உடல்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு புதைக்கப்படு கிறது என்றார்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் காஜிபுர் பகுதி கங்கை நதியில்உடல்கள் மிதப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம்.பி. சிங்கூறியபோது, காஜிபுர் கங்கைநதியில் உடல்கள் மிதப்பதாகதகவல் கிடைத்துள்ளது. சம்பவபகுதிக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment