இந்தியாவில் 3,48,421 பேருக்கு புதிதாக கரோனா தொற்று

புதுடில்லி, மே 12 இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,48,421 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகா தாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,48,421 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,33,40,938 ஆக அதிகரித்துள் ளது.

தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 37,04,099 ஆக அதிகரித்துள் ளது.

இதுவரை கரோனாவிலி ருந்து 1,93,82,642 பேர் குண மடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவி லிருந்து 3,55,338 பேர் குண மடைந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 4205 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,54,197 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 17,52,35,991 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

அய்சிஎம்ஆர் அறிவிப்பின் படி, இதுவரை 30,75,83,991 பேருக்கு கரோனா பரி சோதனை செய்யப்பட்டுள் ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 19,83,804 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன

இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்திக் கொள் வோரின் எண்ணிக்கை அதி கரிப்பு உள்ளிட்ட காரணங் களாலேயே வைரஸ் பாதிப்பு குறைவதாகமருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்

றனர்.

நேற்று அதிகபட்சமாக கருநாடகாவில் 39,305 பேருக் கும், கேரளாவில் 37,290 பேருக்கும், மகாராஷ்டிராவில் 37,236 பேருக்கும், தமிழகத்தில் 29,272 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 21,331 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 17,120 பேருக்கும் கரோனா தெற்று உறுதி செய்யப்பட்டது.

ஒரே நாளில் பெருந்தொற்று பாதிப் புக்கு 3,876 பேர் உயிரிழந்தனர்.

மகாராட்டிரா, கருநாடகா, தமிழகம், கேரளா, உத்தரபிர தேசம், மேற்கு வங்கம், ராஜஸ் தான், ஆந்திரா, அரியாணா, டில்லி ஆகிய 10 மாநிலங்கள் தான், தினசரி வைரஸ் பாதிப்பில் 69.88 சதவீதத்தை பிடித்திருக்கின் றன.

அதேபோல, மகாராஷ் டிரா, கருநாடகா, உத்தரபிர தேசம், ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் தான், நாட்டில் உள்ள ஒட்டு மொத்த கரோனா நோயாளி களில் 82.68% பேர் இருக்கின் றனர்.

இது ஒருபுறம் இருக்க, நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 82 பேர் கரோனா தெற்றில் இருந்து குணமடைந் திருக்கிறார்கள்.

இதனுடன் சேர்த்து, இது வரை பெருந்தொற்று பாதிப் பில் இருந்து குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 1.90 கோடியாக உயர்ந்திருக்கிறது.

அதன்படி, குணமடைந்த வர்களின் விகிதம் 82.75% உள்ளது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image