கரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால் அடுத்தடுத்த கரோனா அலைக்கு வாய்ப்பு

பிட்ச் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை

புதுடில்லி, மே 12 இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தாவிட்டால், அடுத்தடுத்து கரோனா அலை உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக ஒரு ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் கடந்த 5ஆம் தேதி நிலவரப்படி 9.4 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 9ஆம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 16.94 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பொருளாதார மதிப்பீடு தர நிர்ணயம் வழங்கும் பிட்ச் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடந்து வருகிறது. இதனால் தற்போதைய 2ஆவது அலை முடிந்தபின், அடுத்தடுத்து கரோனா அலைகள் உருவாகும் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு இது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏப்ரல், மே மாதங்கள் மட்டும் பொருளாதார செயல்பாடுகள் மந்தமடையலாம், பொருளாதார மீட்சி சற்று பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். தற்போதுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை அதிகாரிகள் அமல்படுத்தினாலும், பொருளாதார நடவடிக்கையை பாதிக்காத வகையில் இருந்து வருகிறது. ஆனால் அதிகமான மாநிலங்களில் நீண்ட கால ஊரடங்கை நடைமுறைப்படுத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க

பா... முயற்சி தொல்.திருமாவளவன் கண்டனம்

 சென்னை, மே 12 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமி கரோனா தொற்றின் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் பா... மேற்கொண்டு வருகிறது.

மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக அங்கே ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பா...வின் சதித் திட்டத்தை முறியடிக்க புதுச்சேரியில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

புதுச்சேரியில் 6 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தி.மு.. உடனடியாக இதில் தலையிட வேண்டும். புதுச்சேரியில் பா... தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இத்துடன், நட்புக்குத் துரோகமிழைக்கும் பா...வை தோளில் சுமக்கும் என்.ஆர். காங்கிரஸ், இந்த நிலையிலாவது விழித்து கொள்ளவேண்டும் என்றும், தமக்கு எதிராக நேரவிருக்கும் வரலாற்று பழியைத் தவிர்த்துக்கொள்ள, தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.  

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image