செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 14, 2021

செய்தியும், சிந்தனையும்....!

தலையெழுத்தல்ல - தன்னம்பிக்கை

*           ஒடிசாவில் கரோனாவால் வேலையிழந்த ரஞ்சன் சாகு என்ற தோழர் வேலை இழந்த 70 பேரை ஒன்றிணைத்து ஆடை உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார்.

>>           ‘‘வேலை கேட்கமாட்டோம்! வேலை கொடுப்போம்!'' நீண்ட காலத்திற்கு முன்பே இந்த முழக்கத்தைக் கொடுத்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

பிறன்நோய் - தன்னோய்போல் கருதவேண்டும் - திருவள்ளுவர்

*           கரோனா நிவாரண நிதிக்கு தி.மு.. அறக்கட்டளை ரூபாய் ஒரு கோடி - பா... - எம்.பி.,கள், எம்.எல்..,க்கள் ஒரு மாத சம்பளம் நன்கொடை.

>>           பணம் - மனிதனுக்குக் கருவியே தவிர, பணத்துக்கு மனிதன் கருவியல்ல!

சிதம்பரம் தீட்சதர் வீடுகளைக் கவனியுங்கள்!

*          குழந்தைத் திருமணம் நடை பெற்றால் 1098 உதவி எண்ணில் புகார்தெரிவிக்கலாம். - சென்னை மாவட்ட ஆட்சியர் கீதாலட்சுமி.

>>           மாவட்ட ஆட்சியர் ஒரு பெண்ணல்லவா!

சங் பரிவார்க்குக் காணிக்கை

*           கரோனாவால் உயிர் இழந்த ஆதரவற்ற உடல்களுக்கு சொந்த செலவில் இறுதி மரியாதை செய்த - திருப்பதி இஸ்லாமிய குழுவினர்.

>>           பாராட்டுக்குரியது - மதத்தைக் கடந்த மனிதநேயம்.

செவிடன் காதில் ஊதிய சங்கு!

*          வேளாண் சட்டத்தை எதிர்த்து மருத்துவர்கள் ஆக்சி ஜனுடன் விவசாயிகள் போராட்டம்.

>             சாலையோரத்தில் விபரீதக் குறி - எச்சரிக்கை!

நோயில் கொடியது பசிப் பிணி!

*           அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருள்கள் ஜூன் 3 ஆம் தேதி வழங்க முடிவு.

>>           இதற்குப் பெயர்தான் மக்கள் நல அரசு.

மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?

*           ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - தமிழக டி.ஜி.பி. எச்சரிக்கை!

>>           ஊரடங்கு மக்களுக்காகத் தான் என்பது நினைவில் இருக் கட்டும்!

No comments:

Post a Comment