தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது

சென்னை,மே15- தமிழகத்தில் கரோனா வைரசின் 2ஆம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளதுஅடுத்தகட்ட நட வடிக்கை குறித்து சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர் களுடன் முதலமைச்சர் மு..ஸ்டாலின்  13.5.2021  அன்று ஆலோசனை நடத் தினார். இதில், ஊரடங்கை தீவிரப் படுத்துவது என முடிவு செய்யப் பட்டது.

இதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளை நீக்கி, கட்டுப்பாடுகளை தீவிரப் படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் நேற்று (14.5.2021) ஆலோசனை நடத்தப்பட்டது. தலை மைச் செயலாளர் வெ.இறையன்பு, டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, உள்துறை செயலாளர் எஸ்.கே.பிர பாகர், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். ஊர டங்கு தளர்வுகளை குறைப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் விவாதிக்கப் பட்டது.

இதையடுத்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (14.5.2021) வெளியிட்ட அறிக்கை:

தவிர்க்க முடியாத காரணங்கள் அடிப்படையில், மே 15ஆம் தேதி (இன்று) அதிகாலை 4 மணி முதல் வரும் 24ஆம் தேதி அதிகாலை 4 மணிவரை புதிய கட்டுப் பாடுகள் விதிக்கப்படுகின்றன.

தனியாக செயல்படும் மளிகை, பல சரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற் பனைக் கடைகள் குளிர்சாதன வசதி யின்றி பகல் 12 மணிக்கு பதில், காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்.

மின் வணிக நிறுவனம் மூலம் மளிகை, காய்கறிகள் இதே நேரத்தில் மட்டும் விநியோகிக்க அனுமதிக்கப் படும். இந்த கடைகள் தவிர வேறு கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

ஏடிஎம் மய்யங்கள், பெட்ரோல், டீசல் பங்க்குகள், ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் செயல் படலாம்.

பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே தங்களுக்குத் தேவை யான மளிகை, பலசரக்கு, காய் கறிகளை வாங்கிக் கொள்ளலாம்.

காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல் பட அனுமதி இல்லை.

தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை

மின் வணிக நிறுவனங்கள் பிற் பகல் 2 முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு '-'பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன் றவற்றுக்கு மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணிக்க -பதிவு முறை கட்டாய மாக்கப்படும். வரும் 17ஆம் தேதி காலை 6 மணி முதல் -பதிவு முறை நடைமுறைக்கு வரும். 

மாநிலத்தின் அனைத்து பகுதி களிலும் ஏற்கெனவே அறிவித்தபடி இரவு 10 முதல் காலை 4 மணிவரை இரவு ஊரடங்கு தொடர்ந்து அமல் படுத்தப் படும்.

அதேபோல் மே 16, 23 ஆகிய ஞாயிற் றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

மீன் மற்றும் இறைச்சிக் கடை களில் பொதுமக்கள் அதிகம் கூடுவ தால், இந்த கடைகளை பல்வேறு இடங்களுக்கு பரவலாக மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரடங்கு விதிமுறைகளை பொது மக்கள் முழுமையாக கடை பிடித்தால் மட்டுமே நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். அரசின் முயற்சிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment