"தமிழ்நாடு இதுவரை கண்டிராத முதல் அமைச்சர்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 16, 2021

"தமிழ்நாடு இதுவரை கண்டிராத முதல் அமைச்சர்"

 புகார் கூறிய பெண்மணியின் குறையை உடனடியாக தீர்த்த செயல்மிகு முதல்வர்!

14.5.2021 அன்று இரவு டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கரோனா 'வார் ரூம்" ஆய்வுக்குச் சென்ற முதலமைச்சர் மு.. ஸ்டாலின் ஒரு பெண்மணியின் அவலத்தை அறிந்து, அவரிடம் தொலைப்பேசியில் பேசினார்; அவர் முதலில் நம்பவில்லை.

மறுபடியும் தொடர்பு கொண்டு அவர் முதல் அமைச்சர் என்று உறுதி செய்து மகிழ்ந்தார்; அந்தப் பெண் பெயர் அர்ச்சனா. அவரது உறவினருக்கு உடனே ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் இடம் கிடைத்தது அறிந்து மகிழ்ந்ததுடன், "தமிழ்நாடு இப்படிப்பட்ட முதல்வரை இப்போதுதான் பார்க்கிறது!" என்று கூறி வியந்தார்.

சென்னை - நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்மணி, மருத்துவ உதவி கேட்டு தொலைப் பேசியில் தொடர்பு கொண்டபோது   முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களே அந்த  அழைப்பை கையாண்டு   உதவி யுள்ளார். கரோனா காலத்தின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக சென்னை -  டி.எம்.எஸ். அலுவலகத்தில்  'வார் ரூம்'  (போர்க்கால நடவடிக்கைப் பிரிவு) என்னும் ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டு பொது மக்களுடைய பிரச்சினை களைத் தீர்ப்பதற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு மிகப்பெரிய குழுவினர், காலநேரம் பார்க்காமல் செயல்பட்டு வருகின்றனர். இந்தக் குழு சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதை மேற்பார்வையிடுவதற்காக தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் 14.5.2021 அன்று இரவு 11 மணிக்கு அந்த "வார் ரூம்"க்குச் சென்றார். அப்படி அவர் பார்வையிட வந்தபோது, பொதுமக்களிடம் இருந்து வந்த சில தொலைபேசி அழைப் புகளை தானே எடுத்துப் பேசி உதவி இருக்கிறார்.  சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்மணியிடம் தானே நேரில் பேசி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். அதன்பிறகு அந்தப் பெண் கேட்ட உதவிகள் அனைத்தையும் செய்து தந்துள்ளார்.

இது பற்றி அர்ச்சனா நெகிழ்வுடன் கூறியதாவது: "கரோனா நெருக்கடி அவசர கால உதவி மய்யத்தை நான் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, உடல் நலமில்லாத என்னுடைய உறவினருக்கு  படுக்கை வசதி செய்துதரும்படி உதவி கோரினேன்.

மறுமுனையில் பேசியவர், "நான் மு..ஸ்டாலின் பேசுகிறேன்" என்று கூறி விட்டு 'என்ன வகையான பெட் வேண் டும்?' எனக் கேட்டார்.

"-2 வகை பெட் வேண்டும்" எனக் கூறினேன். உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.  அப்போது  அவர், "உங் களுக்கு வேறு என்ன விதமான உதவி தேவை?" என்பதையும் கேட்ட றிந்தார். அவர் பேசும்போது என்னிடம், 'ஸ்டாலின்' என்று தன் னுடைய பெயரைக் குறிப்பிட்டி ருந்தார். இன்னொரு முறை கேட்டபோதும் அவர் தன்னுடைய பெயரைக் கூறினார்.

இரவு 11 மணி அளவிலும்  விழித் திருந்து அவர் மக்கள் பணியாற்றுவது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

இப்படி ஒரு முதலமைச்சரை தமிழகம் இதுவரை கண்டிருக்குமா என்ற கேள்விக் குறி என் மனதில் ஆச்சரியமாக எழுந்தது.

திடீரென கிடைத்த இந்த இன்ப அதிர்ச்சியில் என்னால் பேச முடிய வில்லை, திக்குமுக்காடிப் போனேன்.

நெருக்கடி மிகுந்த இப்படிப்பட்ட நேரத்தில் சாதாரண மக்களும் தொடர்பு கொள்ளக் கூடிய எளிய முதலமைச்சராக அவர் இருப்பது எனக்கு பெரும் ஆறு தலை அளித்தது.

இப்படிப்பட்ட முதலமைச்ச ரைத்தான் நாங்கள் இத்தனை நாளாக தேடிக் கொண் டிருந்தோம். அவர் எங்களுக்கு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி" என்று கூறினார்.

 

 

No comments:

Post a Comment