ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தின் முதல்வராக மம்தா மே 5-ஆம் தேதி பதவி ஏற்கிறார். குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த அவர் தேர்தல் ஆணையம் மறுவாக்குக்கு உத்தரவிட மறுப்பது குறித்து சந்தேகத்தையும் எழுப்பி யுள்ளார்.

·     கரோனா தடுப்புப்பணியிலும், இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு விஷயத்திலும் மோடி முற்றிலுமாக தோல்வியடைந்து உள்ளார். மேற்கு வங்கம் தெளிவான முடிவை தந்து விட்டது. அதே போன்று கேரளமும், தமிழ்நாட்டில் திமுகவிற்கும் மக்கள் ஆதரவு தந்துள்ளார்கள். இருண்ட பாதையில் சில வெளிச்சங்கள் தெரிகிறது என அரசியல் ஆய்வாளர் மோகன் குருசாமி தனது கட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     விசாரணைகளின் போது நீதிபதிகள் கடுமையாக தெரிவிக்கும் கருத்துகளை ஊடகங்கள் வெளியிடாமல், நீதிமன்ற உத்தரவுகளை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம்  நிராகரித்தது. நீதிமன்ற நடவடிக்கை களை தீவிரமாக, நிமிடத்திற்கு ஒரு முறை அறிக்கையிடுவது வெளிப் படைத்தன்மை மற்றும் பொது நம்பிக்கையை வளர்க்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்..

- குடந்தை கருணா

4.5.2021

Comments