பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நூலகருக்கு "நூலக பேராசிரியர் திலகம் விருது 2021" - "நூலகச் சிற்பி விருது 2021"


 வல்லம், மே 2- சென்னையில் இயங்கிவரும் தமிழ்நாடு நூலகர்கள் அமைப்பு, செயல்பாட்டின் அடிப்படை யில் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகர்களையும் ஒன்றிணைத்து அவர்களின் நூலகச் சேவைகளை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்வுகளை வலை யொலிக்காட்சி வாயிலாகவும், 40க்கு மேற்பட்ட நிகழ்வுகளை நிகழ்த்திப் பெருமை சேர்த்துள்ளது.

நூலகப் பணியின் பெருமைகளை உலகெங்கும் நிலை நிறுத்தும் வகையில் நூலகர்களைப் பெரு மைப்படுத்தும் விதமாக 2021ஆம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள நூலகர்களின் சேவைகளை கவுரவிக்கும் விதத்தில் பன்னாட்டு நூலகர் விருது கள் வழங்கப்பட்டன. அந்த அடிப்படையில் நூல கத் துறையில் மிகச்சிறந்த முறையில் சேவையாற்றி வருவதை பெருமைப்படுத்தும் வகையில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தின் நூலகர் முனைவர் டி.நர்மதாவுக்கு "நூல கப் பேராசிரியர் திலகம் விருது 2021" வழங்கியது.

நூலக வளர்ச்சியில் தனது அயராத பணி மற்றும் சேவையாற்றி வருவதை பெருமைப்படுத்தும் வகையில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன துணை நூலகர் முனைவர் கே.ராஜூ அவர்களுக்கு "நூலகச் சிற்பி விருது 2021" அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு விருதுகளும் நூலக சேவையை பாராட்டி வழங்கி கவுரவித்து பெருமை படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments