பெரியார் மருந்தியல் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்


மூலிகை மருந்தியல் துறை, பெரியார் நலவாழ்வு சங்கம் மற்றும் நாட்டு  நலப் பணித்திட்டத்தின் சார்பாக திருச்சி மாநகராட்சி சித்த மருந்தகத்தின் மூலம் பெரியார் மருந்தியல் கல்லூரியின் பணியாளர்கள், இறுதியாண்டு பட்டயப்படிப்பு, இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு 26.04.2021 அன்று கபசுரக் குடிநீர் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமை வகித்து கரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களையும், கபசுரக் குடிநீரின் பயன்களையும் மாணவர்கள் மத்தியில்  எடுத்துரைத்தார். கபசுரக் குடிநீர் தொடர்ந்து அய்ந்து நாட் களுக்கு மாணவர்கள், பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

Comments