குஜராத் ஆக்சிஜன் நிரப்பும் ஆலையில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு

ராஜ்கோட், மே 2 குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் நிரப்பும் ஆலை யில் நடந்த இரு குழுவின ரிடையே நடந்த மோதலில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார்.

நாடெங்கும் கரோனா பரவல் அதிகரித்ததால் ஆக் சிஜன் தேவையும் அதிகரித் துள்ளது.   இதையொட்டி ஆக்சிஜன் ஆலைகள் முழு அளவில்,   முழு வேகத்தில் இயங்கி வருகின்றன.  இதில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள மோட்டா சிராய் கிராமத்தில் உள்ள ஆலையும் ஒன்றாகும்.

26.4.2021 அன்று இரவு இந்த ஆலைக்கு வெளியே ஒரு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  வெகு நேரமாகியும் அந்த வாக னத்தை யாரும் எடுக்காததால் வழியை விடச் சொல்லி ஒரு குழுவினர் தகராறு செய்துள் ளனர்.   இந்த வாகனம் நிறுத் தலுக்கு ஆதரவாக வேறு சிலர் பேச கடும் மோதல் ஏற்பட்டுள்ளது

இந்த மோதலில் ராஜ்ப ஜடேஜா என்பவர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மூன்று முறை தரையை நோக்கிச் சுட்டுள் ளார்.  இதனால் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அங்கு இருந்த காவல்துறை காவலர் ஒருவர் உடனடியாக செயல் பட்டு துப்பாக்கியைப் பிடுங்கி நிலைமையைக் கட் டுக்குள் கொண்டு வந்துள் ளார். இது குறித்து காவல் துறையினர் 2 அடையாளம் தெரி யாதோர் உள்ளிட்ட

7 பேர் மீது வழக்குப் பதிந்துள் ளனர்.   இந்த வழக்கு தொடர் பான விசாரணை நடந்து வருகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Comments