உரத்தநாடு இரா. இராசா நினைவேந்தல்

உரத்தநாடு, மே 2- 29.4.2021 இரவு 8:00 மணி அளவில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனின் சகோதரர் நெடுவாக் கோட்டை இரா.இராசா தஞ்சையில் உள்ள அவரின் சகோதரி இல்லத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறிது காலம் சிகிச்சையில் இருந்து மறைந் தார். அன்று இரவு 11:00 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வு 30.4.2021 காலை 11.00 மணி அளவில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் இல்லத்தில் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் .அருணகிரி, உரத்தநாடு ஒன்றிய தலைவர் .செகநாதன் முன்னிலையில் மறைந்த இராசா அவர்களின் சின்னத் தாயார் சரோஜா அம்மையார் அவர் கள் இரா.ராசாவின் படத்தினைத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நினைவேந்தல் கூட் டத்தில் பொதுச்செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் வழக் குரைஞர் .அருணகிரி, உரத்தநாடு ஒன்றிய தலைவர் .செகநாதன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் அதிரடி அன்பழகன், மாநில மாண வர் கழக அமைப்பாளர் இரா. செந் தூர பாண்டியன், தஞ்சை மாநகர தலைவர் சு. நரேந்திரன், நெடுவை தம் பிக்கண்ணு ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

நிகழ்வில் தஞ்சை மேனாள் நாடா ளுமன்ற உறுப்பினர் பரசுராமன், மாநில பெரியார் வீர விளையாட்டுக் கழக தலைவர் .சுப்பிரமணியம்,மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிகுமார்,மாநில கலைத் துறை செயலாளர் சித்தார்த்தன், பெரியார் சமூகப்பணி இயக்குநர் பொய்யாமொழி, கழகப் பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன், தஞ்சை மாநகர செயலாளர் முருகேசன், உரத்தநாடு ஒன்றிய செயலாளர் லெட்சுமணன், தஞ்சை தெற்கு ஒன் றிய செயலாளர் நெல்லுபட்டு இராம லிங்கம்,மாவட்ட .. தலைவர் அழகிரி, மாவட்ட .. அமைப்பாளர் பாவலர் பொன்னரசு, பொதுக்குழு உறுப்பினர் முகிலன், மாவட்ட துணைச்செயலாளர் சந்துரு, தஞ்சை மாவட்ட வழக்குரைஞர் அணி தலை வர் சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜய குமார், உரத்தநாடு ஒன்றிய இளைஞ ரணி செயலாளர் அன்பரசு, தஞ்சை மாவட்ட கலை இலக்கிய அணி செய லாளர் சடையார்கோயில் நாராயண சாமி, பூதலூர் ஒன்றிய தலைவர் அல்லூர் பாலு, தஞ்சை தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆட்டோ ஏகாம்பரம், உரத்தநாடு நகர தலைவர் பேபி ரவிச்சந்திரன், மாவட்ட மாண வர் கழக தலைவர் கபிலன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் மான வீரன், புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் இளவரசன், பிள்ளையார் பட்டி பகுதி செயலாளர் முருகேசன், ரெட்டிப்பாளையம் இளைஞரணி அமைப்பாளர் தேவா, மாவட்ட பெரியார் வீர விளையாட்டுக்கழக தலைவர் சிகாமணி, உரத்தநாடு மேற்கு பகுதி செயலாளர் புலவர் மோகன் தாஸ், உரத்தநாடு நகர துணைச் செய லாளர் வழக்குரைஞர் மாரிமுத்து, உரத்தநாடு நகர இளைஞரணி அமைப்பாளர் மாதவன், கந்தர்வக் கோட்டை சேகர்,ஒக்கநாடு மேலை யூர் பாலகிருஷ்ணன், திராவிடச் செல்வம், பெரியார் மணி, பெரியார் நகர் உத்திராபதி, தெற்கு நத்தம் சசி குமார், தஞ்சை நகர இளைஞரணி துணைச் செயலாளர் இராஜராஜன், வெள்ளூர் முருகேசன், தஞ்சை அமு முக ஒன்றிய பொறுப்பாளர் செந்தில், தமிழ்தேசிய கட்சி தமிழ்நேசன், தஞ்சை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை தலைவர் நாத்திகன், தஞ்சை திமுக இளைஞரணி பொறுப்பாளர் திரா விட மணி, தஞ்சை சதீஸ்குமார், அத்தி வெட்டி லண்டன் வீரவேல், கண்ணந் தங்குடி ரமேஸ், ஓட்டுநர் பிரபாகரன், பிரவுசர் புத்தக உலகம் உண்மையாளர் குட்டிமணி, மறைந்த இராசா சகோ தரர் ராவணன், சகோதரிகள் இராணி, இரமணி, மகன் பிரபாகரன் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வை தசை மாநகர அமைப்பாளர் வன்னிப் பட்டு தமிழ்ச்செல்வம் ஒருங்கிணைத் தார். நினைவேந்தல் நிகழ்வில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Comments