புதுச்சேரியில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் த.கண்ணன் அவர்களின் படத்திறப்பு

புதுச்சேரியில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் .கண்ணன் அவர்களின் படத்திறப்பு 29-04-2021 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி லபோர்த் வீதி பி.எம்.எஸ்.எஸ்.எஸ். ஹாலில் நடைபெற்றது.  புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ. வீரமணி தலைமையில் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கண்ணன் உருவப் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் காணொலி மூலம் நினைவுரையாற்றினார்கள்.  கண்ணன் அவர்களின் துணைவியார் பானுமதி, மகன் . வீரமணி, இளையமகன் . செல்லமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

Comments