மறைவு

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி முன்னாள் பேரூராட்சித் தலைவி பரிமளா பாண்டியனின் வாழ்விணையரும், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரும், பெரியார் பற்றாளரும், சமூக ஆர்வலரும் அரசு மேல்நிலைப் பள்ளியின் கல்விப் புரவலருமான பிபிபி பாண்டியன் (வயது 74) 25.4.2021 அன்று மறைவுற்றார். அவர் உடலுக்கு இலால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் .சவுந்தர பாண்டியன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ரஷ்யா ராஜேந்திரன், நகர தி.மு.. செயலாளர் .முத்துக்குமார், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் .ஜெயப்பிரகாஷ், மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் பெ.ரெங்கராஜன், வட்டார தலைவர் .அர்ச்சுனன், நகர தலைவர் .நடராசன், திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் .செல்வம், ஒன்றிய தலைவர் மு.திருநாவுக்கரசு, நகர செயலாளர் பொற்செழியன் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர், வியாபாரிகள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் மாலை வைத்து மரியாதை செய்தனர்.

Comments