சீனாவின் ‘தியான்வென்-1’ விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்கி சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 17, 2021

சீனாவின் ‘தியான்வென்-1’ விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்கி சாதனை

பெய்ஜிங்,மே16- சீனாவின் தியான்வென்-1 விண்கலத்தின் லேண்டர் செவ்வாய்க் கோளில் நேற்று காலை தரையிறங்கி சாதனை படைத்தது.

விண்வெளியில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா உட்படபல நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், ‘சிவப்பு கிரகம்என்று அழைக்கப்படும் செவ்வாய்க் கோளுக்கு விண்கலங்கள் அனுப்பும் முயற்சியில் பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்தியாவும்மங்கல்யான்விண்கலத்தை செவ்வாய்க் கோளுக்கு அனுப்பியது. அந்த கோளின் சுற்று வட்டப் பாதையில் இந்திய விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் முதல் முயற்சியிலேயே குறைந்த செல வில் செவ்வாய்க் கோள் சுற்று வட்டப் பாதையில் விண்கலத்தை நிலை நிறுத் திய நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.

இந்நிலையில், செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யதியான்வென்-1’ என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா விண்ணில் ஏவியது. இந்தத் திட்டத்துக்குஎப்படி இருக்க...’ (சீன மொழியில்நி ஹவோ மா’) என்று சீனா பெயர் சூட்டியுள்ளது. சீன விண் கலம் திட்டமிட்டபடி கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய்க் கோள் சுற்று வட்டப் பாதையை அடைந்தது.

அதன்பின், விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவியை செவ்வாயில் தரையிறக்கும் பணி தொடங்கியது. லே ண்டரை தரையிறக்கும் போது, கடைசி 7 நிமிடங்கள் மிகவும் மோசமானது என்று பல நாட்டு விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். அந்த அபாய கட்டத்தை எட்டிவிட்டதாக கடந்த வெள்ளிக் கிழமை சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்தது.

No comments:

Post a Comment