மதவெறியை கிளப்பி ஓட்டு கேட்ட பி.ஜே.பி. எம்.பி.யின் தேர்தல் செல்லாது: பம்பாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 17, 2021

மதவெறியை கிளப்பி ஓட்டு கேட்ட பி.ஜே.பி. எம்.பி.யின் தேர்தல் செல்லாது: பம்பாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பம்பாய், ஏப்.9, 1994

புனே மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட பிஜே.பி. எம்.பி. தேர்தலின் போது மதத்தின்பெயரால் வாக்கு சேகரித்தது நிரூபிக்கப் பட்டதால் அவருடைய தேர்தல் செல்லாது என பம்பாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தானே மக்களவைத் தொகுதி யில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராம்காப்சே. இவர் பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்தவர்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்விய டைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஹர்பன்ஸ் சிங், காப்சே வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பாபா தன்னுடைய மனுவில் தேர்தலின் போது, வேட்பாளர் ராம் காப்சே, பெண் சாமியார் சாத்வி ரிதம்பரா, பிரமோத் மகா ஜன் ஆகியோர் மதத்தின் பெயரால் ஓட்டு கேட்டனர். இந்திய பிரதிநிதித்துவச் சட்டப்படி இது குற்றமாகும். எனவே, இவர் தேர்ந் தெடுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அகர் வால் கடந்த வெள்ளிக் கிழமை அன்று தீர்ப்பளித்தார். அதில் மதத்தின் பெயரால் வாக்குகள் கேட்டது நிரூபிக்கப்பட்டிருப்பதால் ராம் காப்சே யின் தேர்தல் வெற்றி செல்லாது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

1991 மே 21ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய வி.எச்.பி. பெண் பேச்சாளர் சாத்வி ரிதம்பரா, பிரமோத் மகாஜன், வேட்பாளர் காப்சே ஆகியோருடைய பேச் சுக்கள் குற்றமுடையதாகும். அதன் மூலம் மக்கள் பிரதிநிதித் துவச் சட்டத்தில் 123(3)வது பிரிவின் கீழ் சாத்வி ரிதம்பரா குற்றம் இழைத்திருக்கிறார். சாத்வி ரிதம்பரா இந்து மதத்தின் பெயரால் வாக்கு கேட்ட போது காப்சேயும் மேடையில் இருந்திருக்கிறார்.

மகாஜன், ராம ஜென்ம பூமி - பாபரி மஸ்ஜித் பிரச்சினையின்மீது வாக்கு கேட்டிருக்கிறார். மகாஜனும், காப்சேயும் ரத்த உறவு கொண்ட சகோத ரர்களான இந்துக்களும் முஸ்லீம்களும் பிரிவினைக் குப்பின் நண்பர்களாக கூட இருக்க முடியவில்லை என்று தேர்தல் மேடைகளில் கூறக்கூடாது என்று ஒப்புக் கொண்டுள்ளனர். இது இந்துக்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுபற்றி பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்றும், அது முறையற்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே சாத்வி ரிதம்பராவும், பிரமோத் மகாஜ னும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு எதிராக குற்றம் புரிந்திருக்கிறார்கள் என்பதால் காப்சேயின் தேர்தல் செல்லாது, அவருடைய தேர்வு ரத்து செய் யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடிப்படையில் பார்த்தால் - பா... தேர்தலில் போட்டியிடும் தகுதியையே முற்றிலும் இழந்துவிடும் அல்லவா!

No comments:

Post a Comment