கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்

கன்னியாகுமரி, ஏப்.11 கன்னியாகுமரி மாவட்டம் வருபவர் களுக்கு  -பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா  வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 9.4.2021 அன்று  கரோனா  பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது.

கரோனா  தொற்று பரவல் அதிகரிப்பால் 10.4.2021 முதல் புதிய கட்டுப் பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

புதிய கட்டுப்பாடுகள் பலன் அளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வருபவர்களுக்கு 10.4.2021 முதல் -பாஸ் கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Comments