செய்தியும், சிந்தனையும்....!

என்ன செய்கிறேன் பார்!'

*           மேகதாதுவில் அணை கட்டும் பணியை விரைவுபடுத்தும் கருநாடக அரசு.

>>           தமிழ்நாட்டில் பா...வை  அனுமதிக் காவிட்டால் பழிவாங்குவோம் என்ற போக்கா?

வட்டியும் முதலுமாக...

*           மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் மம்தாவுக்கு ஒரு நாள் தடை. - தேர்தல் ஆணையம்

>>           தேர்தல் முடிவில் தெரியும் பதிலடி!

மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!

*           பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப் பளித்த நீதிபதிக்கு லோக் ஆயுக்தா பணி!

>>           என்னதான் நடக்கும் நாட்டிலே?

என்று மடியும் அடிமையின் மோகம்?

*           இராணிப்பேட்டை அருகே மேல் புதுப் பேட்டையில் 13 கொத்தடிமைகள் மீட்பு!

>>           இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கொத்தடிமைகளா?

அடிமைகளின் ஆட்சியல்லவா!

சொல்பவர் மலை முழுங்கி மகாதேவனாயிற்றே!

*           உத்தரகாண்ட்டில் 51 கோவில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவித் துள்ளது - அதுபோல எல்லாக் கோவில் களையும் அனைத்து மாநில அரசுகளும் விடுவிக்கவேண்டும். - ஜக்கிவாசுதேவ்

>>           சிதம்பரம் கோவிலில் தீட்சதர்கள் சுரண்டுவது போதாதா?

Comments