பீகாரில் உயிருடன் உள்ள கரோனா நோயாளியை இறந்ததாககூறி மற்றொருவர் உடலை ஒப்படைத்த அவலம்

பாட்னா,ஏப்.13- பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள மக்மத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சுன்னு குமார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், பாட்னா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், சுன்னு குமார் இறந்து விட்டதாக அவரது சகோதரரிடம் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகிகள், இறந்த வேறொருவரின் உடலை அவரிடம் ஒப்படைத்தனர். அதைப் பார்த்து சுன்னு குமாரின் உற வினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயம் பற்றி கேள் விப்பட்டதும் பாட்னா மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதினார். அதில், இந்த விஷயம் குறித்து விசாரித்து, தவறுக்கு காரண மானவர்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித் துள்ளார். மீண்டும் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

சென்னை லயோலா கல்லூரி இடத்தை கோவில் நிலம் என்று கூறும் நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

சென்னை,ஏப்.13- மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சென்னையில் பழைமையும் பெருமையும் வாய்ந்த லயோலா கல்லூரியின் நிலம் சிவன் கோவிலுக்குச் சொந்தமான நிலம் என்றும் அதனை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஒருசில வலதுசாரி இயக்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் இந்த போராட்ட அறிவிப்பு தமிழகத்தில் தேவையற்ற பதற்றத் தையும், சமூக நல்லிணக்க சீர்கேட்டையும் உருவாக்கும். 

லயோலா கல்லூரி என்பது 1924-ஆம் ஆண்டு 50 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு கட்டப்பட்ட கல்லூரியாகும். முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பத்திரிகையாளர் என். ராம்,  விளையாட்டு வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், விஜய் அமிர்தராஜ் உட்பட பல்வேறு பிரபலங்களையும், கல்வியா ளர்களையும் உருவாக்கிய கல்லூரி லயோலா கல்லூரி.

இந்தக் கல்லூரி கிறிஸ்தவ சிறுபான்மையின கல்லூரி நிறுவனமாக இருந்தாலும் அனைத்துத் தரப்பு மாணவர் களுக்கும் தனது கல்வி ஞானத்தைப் போதித்து வருகிறது. நூற்றாண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கக் கூடிய இந்தக் கல்லூரியின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தேவையற்ற குழப்பங்களை சமூக வலைத் தளங்களில் ஒரு குறிப்பிட்ட வலதுசாரி அமைப்பினர் உருவாக்கி வருகின்றனர். அவர்களின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

மேலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி அமைதியாக உள்ள சமூகங்களுக்கிடையே மத மோதல்களை உருவாக்க நினைக்கும் இதுபோன்ற சமூக விரோதிகள் மீது தமிழகக் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

புதிய தலைமை தேர்தல் ஆணையராக

சுசில் சந்திரா நியமனம்

புதுடில்லி,ஏப்.13- தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த சுனில் அரோரா நேற்று (12.4.2021) ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

இந்தநிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேற்று நியமிக்கப்பட்டார். இத்தகவலை மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்தது. சுசில் சந்திரா, கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியில் இருந்து தேர்தல் ஆணையராக பணியாற்றி வருகிறார். தலைமை தேர்தல் ஆணையராக அவர் இன்று (ஏப்.13) பதவி ஏற்கிறார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 14ஆம் தேதி முடிவடைகிறது. அவரது தலை மையில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத் தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடத்த உள்ளது.

Comments