ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு: ஒருவரும் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு: ஒருவரும் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது

ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடில்லி, ஏப்.7  ரபேல் ஒப் பந்தத்தில் இடைதரகருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக  வெளியான செய்தியை அடுத்து, மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பிரான்சு நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.  ஆனால்,,  காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விமானங்கள் வாங்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 2019 மக்களவை தேர்தலின்போது ரபேல் ஊழல்பற்றி காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது.

இந்நிலையில், ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகருக்கு ரூ.9.5 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாக பிரான்சு செய்தி நிறு வனம் ஒன்று நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என பாஜ மறுத்து விட்டது.

இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அவர் வெளியிட்டுள்ள டிடுவிட்டர் பதிவில், ‘‘குற்றம் என்பது ஒருவரின் நடவடிக்கைக்கான பற்று, வரவை குறிக்கும் கணக்கு புத்தகமாகும். அதில் இருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது'' என குறிப்பிட்டுள்ளார்.

பா..., ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் விஷத்தன்மை கொண்டவை

மல்லிகார்ஜூன கார்கே சாடல்

பெங்களூரு,ஏப்.7- கருநாடக மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாள் விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்துகொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

ஆர்.எஸ்.எஸ்., பா... விஷத்தன்மை கொண்டவை. அவற்றை சுவைத்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். ஆகவே, கருநாடக மாநிலத்தில் நடைபெறுகின்ற இடைத் தேர்தல்கள் மற்றும் பிற மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் அவர்களை ஆதரிக்காமல் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

அரசமைப்புச்சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாஜக மதிப்பதில்லை. காவிக்கட்சியான பாஜக பிரித்தாளும் அரசியலை நடைமுறைப்படுத்தி ஒரு மாநிலத்திலிருந்து அடுத்தடுத்த மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிட எண்ணுகிறது.

பிரதமர் மோடியின் பங்களாதேஷ் பயணத்தின்போது, அந்த நாட்டின் விடுதலைப்போரில் அவர் பங்கேற்றதாக உண்மைக்கு மாறாக கூறியுள்ளார். அதைப்போலவே இந்திய விடுதலைப் போரிலும் பங்கேற்றதாக கூறியிருக்கலாம்.

பாஜகவிலேயே அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட வர்கள் 75 வயதைக்கடந்தவர்கள் என்று கூறி அவர்களுக்கு வாய்ப்பு கிடையாது என்று மோடி ஒதுக்கியுள்ளார். ஆனால், கேரளாவில் 88 வயதான சிறீதரனை தேர்தலில் நிறுத்தியுள்ளார். பாஜகவுக்குள்ளேயே ஒவ்வொருவருக்கு ஒரு கொள்கை என்று பாஜக ஏன் பின்பற்றுகிறது? இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே உரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment