தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பக்கத்து மாநிலங்களில் இருந்து வாக்களிக்க வந்த தமிழர்கள்

 வாத்துருதி, ஏப். 7- கொச்சியில் உள்ள வெல்லிங்டன் தீவின் ஒரு பகுதி வாத் துருதி. இங்கு 5000 தமிழர்கள்  வசிக் கிறார்கள். இந்தக் காலனிக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் துணி பிளாஸ் டிக் பொருட்களை விற்கும் வணிகர்கள் நிரம்பி வழிகின்றனர். இது ஒரு சிறிய தமிழர்கள் வாழும் ஒரு சிறிய பகுதி யாகவே மாறியுள்ளது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் இங் குள்ள தமிழர்கள் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தங்கள் சொந்த கிராமங்களுக்கு வாக்களிக்க ரயில் அல்லது அவர்களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் செல் கிறார்கள். இந்த ஆண்டு இரு மாநில தேர் தல்களும் ஒரே நேரத்தில் நடக் கின்றன.

வாத்துருதி எர்ணாகுளம் சட்ட மன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும். அங்கு யு.டி.எஃப் எம்.எல். வினோத் எல்.டி.எஃப் இன் ஷாஜி ஜார்ஜூக்கு எதிராக நிற்கிறார்.

தமிழ்நாட்டின் திண்டுக்கல் பகுதி யைச் சேர்ந்த சுப்பையா கடந்த 40 ஆண் டுகளாக தினக்கூலியாக கொச்சியில் வேலை செய்து வருகிறார். இவர் ஏப்ரல் 4ஆம் தேதி வாக்களிக்க தனது சொந்த ஊருக்கு வந்தார்

35 வயது கட்டுமான தொழிலாளி வெங்கட்ராமன், "கேரளாவில் தினசரி ஊதியம் அதிகம். ஒரு கட்டிட தொழி லாளிக்கு இங்கு ரூ.1000 சம்பளமாக கிடைக்கிறது. அதேநேரம் தமிழ்நாட்டில் ரூ.600 மட்டுமே.. இருப்பினும், எங்களி டம் தமிழக ரேசன் கார்டு இன்னும் உள்ளது. நாங்கள் வாக்களிக்கவில்லை என்றால் எங்களது பெயர் பொது விநியோக திட்டத்திலிருந்து நீக்கப்படும்" என்றார்.

இவருடைய மனைவி ரேகா அவரும் கட்டுமான தொழிலாளிதான். அவர் மாதம் இருமுறை திருவண்ணாமலைக்கு தங்கள் குழந்தைகளை பார்க்கவும் ரேசன் பொருட்கள் வாங்கவும் செல் கிறார்.

இங்கே மாறி மாறி ஆட்சி செய்யும்  திராவிடக் கட்சிகளில் சமூக நலத் திட்டங்கள், வளர்ச்சிப்பணி தனிமனித பயன்பாட்டிற்காக விலையில்லாப் பொருட்கள், கல்விக்கான வசதி அறிவிப்புகள் போன்றவை வேறு மாநிலங் களில் வாழும் தமிழர்களை தமிழகத்திற்கு வந்து வாக்களிக்கத் தூண்டுகிறது.

இவ்வாறு வெளி மாநிலத்திற்கு சென்று வேலைபார்க்கும் பெரும்பா லான மக்களின் பிள்ளைகள் தமிழகத் தின் மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விடுதிகளில் தங்கிப் படிக்கின்றனர். ஆகையால் தங்களது பிள்ளைகளில் நல்ல எதிர்காலம் கருதி அவர்கள் வாக்குச்சாவடிக்கு ஒருநாள் வேலை கூலியைத் துறந்து வந்து வாக் களித்துவிட்டுச் செல்கிறார்கள்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image