குழந்தை வளர்ச்சியில் குறைபாடு 24 வார கருவை கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி

 புதுடில்லி, ஏப்.7 இந்தியாவில் அதிகபட்சமாக பெண்களின் 20 வார கருவை மட்டுமே கலைக்க அனுமதி வழங்கப் பட்டு உள்ளது.

பொதுவாக, குழந்தையின் கரு வளர்ச்சியில் வழக்கத் துக்கு மாறான நிலை அல்லது குறைபாடுகள் இருக்கின்ற னவா என்று 20 அல்லது 21ஆவது வாரங்களில்தான் ஸ்கேன் எடுத்துப் பார்க்கப் படுகிறது. அதையொட்டியே கருக்கலைப்பு முடிவும் எடுக் கப்படுகிறது. அந்த அடிப் படையில் கருக்கலைப்புக் கான கர்ப்ப காலத்தை 24 வாரங்களாக உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கி, சட்ட திருத்தம் செய்து நாடா ளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. இந்நிலையில், பெண் ஒருவர் தனது 24 வார கருவை கலைக்க அனுமதி கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கடந்த மாதம் கடைசி வாரத்தில் ஸ்கேன் செய்து பார்த்ததில் கரு வளர்ச்சி வழக்கத்திற்கு மாறாக, குறைபாடுடன் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால், தனது கருவை கலைக்க அனுமதி கோரி அப்பெண் மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக டில்லி நீதிமன்றம் எய்ம்ஸ் மருத்து வர்கள் கொண்ட மருத்துவ குழுவை நியமித்தது. அக்குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து வழக்கை விசா ரித்த நீதிபதி பிரதிபா எம் சிங் அளித்த உத்தரவில், கர்ப்பிணி இதய நோயாளியாக இருப்ப தாகவும், அவரது கரு வளர்ச் சியில் குறைபாடு இருப்பதா கவும் மருத்துவ குழு அறிக்கை தந்துள்ளது. எனவே, அவரது 24 வார கருவை கலைக்க நீதி மன்றம் அனுமதி வழங்கு கிறது, என்றார். கணவருடன் ஆலோசித்த நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் முன்பாக, கர்ப்பிணியின் கணவரிடம் பேசிய நீதிபதி, கருவை கலைப்பதில் உள்ள ஆபத்து குறித்தும் விளக்கினார். அவரது கணவர் ஆபத்தை உணர்ந்து ஒப்புக் கொண்ட பின்னரே கருக்கலைப்புக்கு நீதிபதி அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments