50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக் கூறவில்லை: உலக சுகாதார அமைப்பு விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக் கூறவில்லை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்

 ஜெனீவாஏப். 7 இந்தியாவில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற் படும் எனக்கூறுவதாக வெளி யாகியுள்ள காணொலி போலி யானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்து உள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள் ளது. குறிப்பாக நேற்று ஒரு நாள் கரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 1 லட்சத்து 3 ஆயிரத்தை எட்டியது. கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தற்போது 45-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப் பட்டு வரும் நிலையில், 18- வய திற்கு மேற்பட்ட அனைவ ருக்கும் கரோனா தடுப்பூசியை போட  அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மராட்டியம், டில்லி உள்ளிட்ட மாநிலங் கள் இரவு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளன.

இதற்கிடையே, ஏப்ரல் 15- ஆம் தேதிக்குள் இந்தியாவில் கரோனா பாதிப்பு காரண மாக 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறியதாக வீடியோ ஒன்று பரவியதாக சொல்லப் படுகிறது. இதனால்,  மக்கள் மத்தியில் அதிர்வலைகள் எழுந்த நிலையில், அத்தகைய செய்திகளுடன் பரவிய வீடியோ போலியானது என உலக சுகாதார அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment