செய்தியும், சிந்தனையும்....!

ஆயிரங்கால் பூதமடா தொழிலாளி - .ஜீவா!

சிட்லபாக்கம் மத்திய சேமிப்புக் கிடங்கில் வெளியாட்களைக் கொண்டு வந்து சுமைத் தூக்கும் தொழிலை நடத்துவதை எதிர்த்துத் தொழிலாளர்கள் போராட்டம்.

150 உள்ளூர் தொழிலாளர்களைத்  திடீர் என்று புறக்கணித்தது என்ன நியாயம்? 150 தொழிலாளர்கள் அல்ல; 150 குடும்பங்களின் உலை கொதிக்கவேண்டாமா?

என்னதான் நடக்கிறது?

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் - கிரிஜா வைத்தியநாதனுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

தீர்ப்புகள் மாறுகின்றன.

மத நம்பிக்கையின் கிருபையோ இவை!

கும்பமேளாவுக்குச் சென்று வந்தவர்களால் மகாராட்டிராவில் கரோனா தொற்று அதிகரிக்கிறது.

- மும்பை மேயர்

கிசோரி பெட்னேகர்

அதனால் என்ன? கைதட்டுங்கள் கரோனா ஓடியே போய்விடும் - பிரதமர் மோடி.

தேவை சுய புத்தி!

இரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிடின் ரூ.500 அபராதம்.

பக்தியை நம்பும் அளவுக்குப் பொது ஒழுக்கப் புத்தி இல்லையே - என் செய்வது!

அழகல்ல!

முன்னாள் முதலமைச்சர் ஆகிவிடுவார் மம்தா.

- பிரதமர் மோடி

இந்தியா முழுமைக்கும் இவர் பிரதமரா அல்லது வெறும் பா..., சங் பரிவார் கட்சிக்காரரா?

ஆத்திகமா? நாத்திகமா?

கும்பமேளாவிலிருந்து திரும்புபவர்களுக்குக் கரோனா பரிசோதனைக் கட்டாயம்.

இது அசல் நாத்திகச் செயலே!


Comments