இந்தியாவில் ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கரோனா பாதிப்பு: 1,501 பேர் பலி

 புதுடில்லி, ஏப்.18 இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக தொற் றுக்கு ஆளாவோரின் எண் ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  உலகளவில் கரோனா வால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,61,500 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது.

Comments