விவசாயிகளுக்கு குறைந்தபட்ச உத்தரவாத விலையை வழங்க முடிவு: பஞ்சாப் அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 11, 2021

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச உத்தரவாத விலையை வழங்க முடிவு: பஞ்சாப் அரசு

சண்டிகர், ஏப். 11- நேரடி பலாபலன் பரிமாற்றத்திலிருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு விலக்களிக்க, மத்திய அரசு மறுத்துவிட்டதால், மாநில அரசே, விவசாயிகளுக்கு, குறைந்த பட்ச உத்தரவாத தொகையை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடைபெற்ற 2 மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பிற கும், பஞ்சாப் அரசின் இந்தக் கோரிக்கை ஏற்கப்படாத காரணத் தால், மாநில அரசிற்கு வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார் அம்மாநில நிதியமைச்சர் மன்பிரீத் பாதல்.

டிபிடி எனப்படும் நேரடி பலா பலன் பரிமாற்ற முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்கான எங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வில்லை. எனவே, எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, மாநில அரசு அதன் சொந்த முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.

எனவே, அரித்யாஸ் என்ற அமைப் பின் மூலம், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச உத்தரவாத விலையை வழங்க முடிவெடுத்துள்ளோம்என்றுள்ளார் நிதியமைச்சர்.

இதே கருத்தை அம்மாநில உணவு அமைச்சரும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடைமுறையின்மூலம், அரித்யாஸ் என்ற அமைப்பிற்கு பாது காப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக, மாநில முதல் வர் விரைவில் அரித்யாஸ் அமைப்பு களுடன், இதுதொடர்பாக சந்திப்பை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment