என்.டி.சி. மில்கள் மூலம் நூல் உற்பத்தி செய்தால் திருப்பூர் பனியன் தொழிலை காப்பாற்ற முடியும்!

மத்திய அரசுக்கு கே.சுப்பராயன் எம்.பி. ஆலோசனை

 திருப்பூர், ஏப். 11- என்.டி.சி மில் கள் மூலம் நூலை உற்பத்தி செய்து வழங்கினால் திருப்பூர் பனியன் தொழிலை காப் பாற்ற முடியும் என்று மத்திய அரசுக்கு திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளருமான கே.சுப்பராயன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் 9.4.2021 அன்று   நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது;

அனைத்து தொழில்களை யும் அழிக்கும் வகையில் கார்ப் பரேட்டுகள் வளம் பெறும் கொள்கையை பி.ஜே.பி. அரசு கடைபிடிக்கிறது என்பது மக்கள் மத்தியில் நிரூபணம் ஆகியுள்ளது.தனியார் நூற்பாலைகள் அடிக்கடி உயர்த்தும் நூல் விலையால் திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனிகள் பெரும் பாதிப் புகளைச் சந்திப்பதால் தொழி லாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு வருகிறது.பணமதிப் பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தாக்குதலுக்கு பின் திருப்பூர் தொழில் நிறுவனங்கள் ஓர ளவு மீண்ட நிலையில் தொடர் நூல் விலையேற்றம் மீண்டும் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்த மான தேசிய ஜவுளி கழகத்தின் (என்.டி.சி) கீழ் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் இயங்கிவரும் 100 க்கும் மேற் பட்ட நூற்பாலைகள் மூலம் மத்திய அரசு நூல்களை தயார் செய்து  தமிழகத்தின் தேவைக்கு நியாயமான விலை யில் வழங்கினால் திருப்பூர் பனியன் தொழிலை பாதிப்பி லிருந்து காப்பாற்ற முடியும்! தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும்! என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்கி றேன்.

தமிழக ஆளுநர் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை கருத்திற்கொண்டு பல்கலைக் கழக துணைவேந் தர்களை அவசர அவசரமாக நியமித்திருப்பது அத்துமீறல் நடவடிக்கை! ஜனநாயக நடை முறையை ஆளுநரே மீறுவது நாட்டுக்கு நல்லதல்ல!

அரக்கோணம் அருகே யுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர் தல் பணி செய்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கள் உடனடியாக கைது செய் யப்பட்டு குற்றவாளிகள் மீது உரிய வழக்குகள் பதிவு செய் யப்படவேண்டும்.

திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர், நல்லாற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்பட்டு சுற்றுப்புறம் மாசடைந்து வருகிறது. இதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Comments