கரோனாவை கட்டுப்படுத்த சிறிய அளவில் ஊரடங்கு

 எய்ம்ஸ் தலைமை மருத்துவர் அறிவுறுத்தல்

புதுடில்லி, ஏப்.5 நாட்டில் தற்போது இரண்டாவது அலையாக அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சிறிய அளவிலான ஊரடங்கு கட்டுப்பாடு அவசியம் என்று டில்லி அகில இந்திய மருத்துவ மய்யத்தின் (எய்ம்ஸ்)தலைமை மருத்துவர் ரந்தீப்குலேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் நாட் டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 93,249 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.24 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரி லிருந்து இதுவரை இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலானோர் இவ்விதம் பாதிக்கப்படவில்லை. படிப்படியாக குறைந்து வந்த நோய் தொற்று பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை தற்போது கிடுகிடுவென அதிகரித்து வருவது குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இப்போது சமூக தொற்றாக இது பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பெருமளவிலான முயற்சிகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு அதைத் தனிமைப்படுத்தவும், அங்கு அதிக மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பரிசோதனைகளின் எண் ணிக்கையை அதிகரிக்கும் நட வடிக் கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமே போதாது.இதற்குப் பதிலாக சிறிய அளவிலான ஊர டங்கு கட்டுப்பாடு நோய் பரவ லைக்கட்டுப்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.

பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் தேவையற்ற பயணங் களைக் கட்டுப்படுத்தினாலே நோய் பரவுவது குறையும். அதேபோல வெளியூர் சுற்றுப் பயணங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

ரயில் மற்றும் சாலை வழிப் பயணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது மிகவும் அவசியம் என்றும் விமான பயணம் மூலம் மட்டுமே இது பரவுவதாகக் கருத முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மிகவும் கடுமையாக பாதிக்கப் பட்ட மகாராட்டிர மாநிலத்தில் பயணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கருநாடகா, சத்தீஸ்கர், டில்லி, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நோய் பரவல் அதி கரித்து வருவது கவலையளிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள் ளார்.

வைரஸ் பரவல் அதிகரிக்கும் பகுதிகளை கண்டறிந்து அங்கு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Comments