தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க முடியாது

 அட்டர்னி ஜெனரல் மறுப்பு

சென்னை, ஏப்.5 தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசின் தலைமை வழக் குரைஞர் கே.கே.வேணுகோபால் மறுத்துவிட்டார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை (6.4.2021 -_ செவ்வாய்க் கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தி.மு. தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த 23-ஆம் தேதி பேட்டி அளித்தார். அப்போது அவர், பல்வேறு மாநிலங்களில் பெரும்பான்மை பலம் பெற்ற ஆட்சியையும் பா... கவிழ்த்துள்ளது. மத்திய அரசு ஜனநாயக ரீதியில் இயங்கவில்லை. நாடாளுமன்றத்தில் பலம் பொருந் தியதாக பா.. உள்ளது. சி.பி.அய்., வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தையும் கூட மத்திய அரசு பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது என குற்றம் சாட்டினார்.

வழக்குரைஞர் என்.மாதவி கடிதம்

இதில் மக்களை அச்சுறுத்த உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என ஸ்டாலின் தெரிவித்திருப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும், அதன் சுதந்திரத் தன்மை அதிகாரத்தை தரம் தாழ்த்துவதாக உள்ளதாகவும் என்.மாதவி என்ற வழக்குரைஞர் மத்திய அரசின் தலைமை வழக் குரைஞர் கே.கே.வேணுகோ பாலுக்கு கடிதம் எழுதினார். எனவே இந்த கருத்துக்காக மு..ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரது கடிதத்துக்கு தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணு கோபால் மின்னஞ்சலில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இது போன்ற பல கருத்துகளை தெரிவித்து வருகின் றனர். வாக்குகளை பெறும் நோக் கில் தெரிவிக்கப்படும் இதுபோன்ற கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.” அப்படி நீதி மன்றத்துக்கு எதிராக தெரிவிக் கப்படும் கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொண்டால் அனைத்தை யும் பரிசீலிக்க வேண்டிவரும்.

நீதிமன்ற அவமதிப்பு இல்லை

நீதிமன்றத்துக்கு எதிராக தெரி விக்கப்படும் கருத்துகள், உச்ச நீதிமன்றத்தின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கடுமையாக சீர்குலைக்கும் போது மட்டுமே நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியும்.ஆனால் நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடர வேண்டிய நிகழ்வு இது இல்லை. எனவே மு..ஸ்டாலினுக்கு எதிராக நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது.

இவ்வாறு அந்த பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments