தயாரிப்புக்கு தவறுவது என்பதே தவறுவதற்கு தயாரிப்பது போன்றதாகும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 29, 2021

தயாரிப்புக்கு தவறுவது என்பதே தவறுவதற்கு தயாரிப்பது போன்றதாகும்!

.எஸ்.பன்னீர்செல்வன்

 (பத்திரிகையாளர்கள் நம்பத் தகுந்த செய்திகளை மட்டுமே அளிக்கவேண்டும் என்பது மட்டுமன்றி, பொது மக்களின் நம்பிக்கையைப் பெற்றும் இருக்க வேண்டும்)

கடந்த வாரம் உணர்ச்சியே அற்ற வறண்ட வாரமாகவே இருந்தது. ஆஷிஷ் யச்சூரி மற்றும் ஷாவோலி ருத்ரா என்ற இரு மிகமிகக் கூர்ந்த மதி படைத்த மாணவர்களை நான் கோவிட்-19 நோய் காரணமாக இழந்துவிட்டேன். பிறரது பாலியல் செயல்பாடுகள் பற்றி விரசமற்ற பார்வையுடன், சுதந்திர இந்தியாவின் பெரும்புகழ் பெற்ற நிகழ்ச் சிகள், புதைகுழிகளில் தவறி விழுந்த நிகழ்ச்சிகள் இரண்டையும் தனது ஒளிப் பதிவுக் கருவியில் மிகமிகத் துல்லியமாகப் பதிவு செய்த மதிப்பு மிகுந்த எனது சகப் பணியாளரான விவேக் பந்தரேயும், கோவிட்-19 உடனான தனது இறுதிப் போராட்டத்தில் தோற்றுப் போனார். நாடெங்கிலும் உள்ள மருத்துவ மனைகளில் மக்களின் உயிர் காக்கும் ஆக்சிஜன் காற்று கிடைக்கவில்லை என்ற அறிக்கைகள் வந்த வண்ணமிருக்கின்றன. எண்ணற்ற நோயாளிகள் இந்த உயிர்க் காற்றை சுவாசிக்கத் திணறித் துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஊடகத்தின் மீதான நம்பிக்கை பற்றிப் பேசுவதில் நான் ஏன் எனது நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்?

ஜனநாயகத்தையே சீரழித்தல்

பத்திரிகையாளர்கள் எதனை தங்களது நியாய மான பணி என்று கருதுகிறார்களோ அதற்கும், ஒரு வாசகர் பிரிவின் கண்ணோட்டத்திற்கும் இடையே உள்ள ஒப்புவமைப் புதிர் ஒன்றை பத்திரிகை யாளர்கள் முன் கடந்த வாரத்தில் நான் விடுவிப்ப தற்காக முன் வைத்தேன். ஆராய்ச்சி உணர்வையும், தங்களது செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்று பதில் கூறவேண்டும் என்ற கண்ணோட்டங்களையும் மவுனமாக  இருக்கச் செய்வதற்கான கடுமையற்ற மொழியினை உண்மையில் மிகுந்த அதிகாரம் பெற்றிருக்கும் ஊடகப் பிரிவு ஒன்று பயன்படுத் தியதாகவே தோன்றியது. அந்த விளக்கவுரை, மக்களாட்சியின் ஊற்றுக் கண்ணையே அடைத்து, சீரழிப்பதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, எதிர் மறையான செய்தி எதனையும் அறிவிக்க வேண் டாம் என்று ஊடகத்தினரை அது கேட்டுக் கொண் டுள்ளதைக் கூறலாம். ஆக்கபூர்வமான முன்னேற் றங்கள் மீது ஊடகங்கள்  கவனம் குவிப்பதை எது தடுக்கிறது என்று என்னைக் கேட்டு இந்தப் பிரிவி னரிடமிருந்து எனக்குக் கடிதங்கள் அடிக்கடி வருவதுண்டு.

அரசமைப்பு சட்டத்தினால் உறுதி அளிக்கப் பட்டுள்ள உரிமைகளை சீரழிப்பதற்கு பல்வேறுபட்ட அமைப்புகள் ஒன்றாகக் கூட்டணி சேர்ந்திருப்ப தாகத் தோன்றும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சட்ட வடிவமைப் பினை ஒரு தத்துவ வடிவமைப்பின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் அரசமைப்பு சட்ட வழக்குரைஞர் கவுதம் பாடியா, அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள மேனாள் இந்திய தலைமை நீதிபதியின் பதவிக் காலத்தைப் பற்றி குறிப்பிடும்போது, ‘‘ஏமாற்றுவது (Evasion), போலித்தனம் (Hypocrisy), இரட்டை வேடம் (Duplicity)  ஆகியவையே தலைமை நீதிபதி பாப்டே விட்டுச் சென்ற பாரம் பரியம்'' என்ற தலைப்பில் ஒரு (Blog) செய்தியை எழுதியிருக்கிறார். ஒரு நீதிபதி அரியணையின்கீழ் இருக்கும் ஓர் அரிமா போல இருக்க வேண்டும் என்ற பிரான்சிஸ் பெகானின் விருப்பத்தை  சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ள கவுதம் பாடியா, இன்று நாம் எட்டியிருக்கும் மிகமிக இழிந்த நிலையை விளக்கிக் கூறியுள்ளார். ‘‘அரியணையின் கீழ் இருக்கும் ஒரு சுண்டெலியைப் பற்றி நினைத்துப் பார். சில நேரங்களில் அது கீச்சொலி எழுப்புகிறது. சில நேரங்களில் மன்னரின் முன் வரும் எவரது கால்களையும் கடிக்கும் துணிவை எடுத்துக் கொள்ளவும் கூடும்.  ‘‘அரியணையின் கீழ் இருக்கும் ஒரு சுண்டெலியாக ஆவதற்கான வழியில் சென்று கொண்டிருக்கும் ஒரு நீதித்துறையைக் காண்பது மிகமிக சோகமான காட்சியே ஆகும்'' என்று பெகான் கூறியுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணை யம் கடந்த  பத்து ஆண்டு காலத்தில் செய்யத் தவறிய கடமைகள் பற்றியோ, செய்த தவறுகளைப் பற்றியோ கூறுவதற்கு நான் முன் வரவில்லை. (அவையெல்லாம் வேறொரு இடத்தில் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.

பெஞ்சமின் பிராங்லின் காலத்தில்  உருவாக்கப் பட்டு  அது முதல் பின்பற்றப்பட்டு வரும்  நவீன பத்திரிகைத் துறையின் விதிகள் பற்றி  பேரறிவு கொண்ட  ‘‘தயாரிப்பதற்குத் தவறியதன் மூலம் நீ தவறுவதற்காகவே தயார் ஆகிறாய்'' என்ற அவரது சொற்களை பத்திரிகையாளர்கள் மிகவும் தீவிர மாகவே எடுத்துக் கொண்டனர்.  ஜனநாயக மாமன்றத்தில் இருந்து பிரித்து அறியப்பட இயலாத ஒரு பிரிவாக செயல்படுவதே பத்திரிகைத் துறை என்பது இதன் கருத்தானால்,  அதன் தீர்ப்பு குடி மக்களை அதிகாரம் மிகுந்தவர்களாக ஆக்குவதே அதன் கடமை. நம்பத்தகுந்த செய்திகளை அளிப்பது மட்டுமே அதன் கடமை அல்ல; பொது மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதும் அதன் கடமையே ஆகும்.

தற்போது நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 நோய்த் தொற்றைப் பயன்படுத்தி பாரதத்துக்கு எதிரான அழிவு சக்திகளால், நம்பிக் கையற்ற எதிர்மறை சூழ்நிலை ஒன்றை நாட்டில் உருவாக்க இயலும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் பொதுச் செயலாளர் தத்தேத்ரேயா ஹோச பெல்லி கூறியது போன்ற செல்வாக்கு மிகுந்த குரல்களை எதிர்த்து குடிமக்கள் கேள்விகளைக் கேட்கவேண்டும். பொது நலன்கள் காரணமாக பத்திரிகைத் துறையோ அல்லது பொதுமக்களோ ஹோசபெல்லேயின் கூற்றை வழிமொழியமாட் டார்கள் என்பதை அவர் கட்டாயமாக உணர்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

‘‘அரியணையின் கீழ் இருக்கும் சிங்கங்களாக நீதித்துறை இருக்க வேண்டும்'' என்று எதிர்பார்க்கப் படும் நிலையில், மேலும் கூடுதல் நடுநிலை வகிக்கும் பொறுப்புணர்வு மிகுந்த, ஒரு காவல் நாய் போன்று செய்தி ஊடகத் துறை செயல்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மே 3 ஆம் தேதியை யுனெஸ்கோ நிறுவனம் ஊடகச் சுதந்திர தினமாக அறிவித்து இருக்கிறது. ‘‘சுதந்திரமான பன்முகத்தன்மை கொண்ட ஆப்பிரிக்க பத்திரிகை அமைப்பை உருவாக்குவது'' என்ற விண்டோயக் பிரகடனம் 1991 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதியன்று நமீபியா நாட்டின் விண்டோயக் நகரில்  ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தக் கொள்கையை மறுபடியும் 30 ஆண்டுகள் கழிந்த பிறகு மறுபடியும் ஒரு முறை பத்திரிகையாளர்கள் வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பது கவலை தரும் செய்தியே ஆகும். செய்தி வியாபாரத்தில் இருப்பவர்கள் கொண்டிருக்கும் உலகக் கண்ணோட்டத்திற்கும், செய்திகளை நுகர்வோரின் கண்ணோட்டத்திற்கும் இடையே உள்ள முரண்பாடுகள் பற்றிய தங்களது அண்மைக் கால அறிவிப்பை பத்திரிகைத் துறையை ஆய்வு செய்வதற்கான ராய்ட்டார் நிறுவனம் ஏப்ரல் 22 அன்று வெளியிட்டுள்ளது.

செய்திகளில் நம்பிக்கை கொள்வதற்கு பத் திரிகை ஆசிரியர்களின் தரமும், பத்திரிகைத் துறையின் செயல்பாடுகளும் அதிக முக்கியத்துவம் கொண்டவை அல்ல என்பதை அது வெளிப் படுத்தியது.  புகழ் பெற்றுள்ள பத்திரிகைகளின் அடையாளச் சின்னங்களுடன், செய்திகள் எவ் வாறு அளிக்கப்படுகின்றன என்பது பற்றிய பார்வை யும் உணர்வும்தான் அதை விட முக்கியமானவை என்றும் அது தெரிவித்துள்ளது. தங்களது பத்திரிகைத் துறை சேவையின் அடிப்படையிலோ தங்களது வெளிப்படைத் தன்மையின் அடிப் படையிலோ  வாசகர்களிடம் நம்பிக்கையை உரு வாக்குவதன் மூலம் தங்களின் அடையாளச் சின்னத்தை உருவாக்குவது மட்டும் போதாது என்று பத்திரிகை அமைப்புகளை இந்த ஆய்வு வலி யுறுத்துகிறது. அந்த ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது போல,  தனது பல போட்டியாளர்களால் வெளி யிடப்படும் செய்தி ஒரு பத்திரிகையால் எங்கிருந்து பெறப்படுகிறது என்பதை அறியாதவர்களாகவோ அல்லது கவலைப்படாதவர்களாகவோ பெரும் பான்மையான பொதுமக்கள் இருக்கும்போது, அவர் களிடையே நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான ஒரே வழி ஊடகக் கல்வி அறிவை முன்னிலைப் படுத்துவது மட்டும்தான்.

நன்றி: ‘தி இந்து', 26.04.2021

தமிழில் : ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment