அய்.அய்.டி. பேராசிரியரின் ஆணவப் பேச்சு!

இந்தியாவின் முக்கியமான அய்.அய்.டி.க்களில் ஒன் றாகக் கருதப்படும் கான்பூர் அய்.அய்.டி. தனது வகுப்பு களை இணைய வழியில் நடத்தி வருகிறது,

இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் சீமா சிங் என்பவர் வகுப்பு துவங்கும்போது, 'தேசிய கீதமும்' அதனைத் தொடர்ந்து 'பாரத் மாதாகி ஜே' என்று மூன்று முறை கூறச் சொல்லியுள்ளார். இணையவழி வகுப்பில் கலந்துகொண்ட சில மாணவர்கள் 'பாரத் மாதாகி ஜே' என்று கூறவில்லை எனக் கூறி, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்களின் ஜாதியைச் சொல்லி அவர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

''உங்களுக்கு சில வினாடிகள் 'பாரத் மாதாகி ஜே' சொல்ல முடியவில்லை. தேசியகீதத்திற்கு எழுந்து நிற்க முடியவில்லை; நீங்கள் எல்லாம் இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள்; நீங்கள் இந்த இடத்திற்கு எப்படி வந்தீர்கள் என்று தெரியும்'' என்று கூறி இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு மற்றும் ஜாதி வெறியோடும் பேசினார். மேலும் ஆங்கிலத்தில் 'Bloody & Bastards' என்று கூறி, அவர்களை முட்டாள்கள் எனச் சொல்லி ''நான் யார் தெரியுமா, நான் என்ன செய்வேன் தெரியுமா? காத்திருங்கள் நான் யார் என்பதை உங்களுக்குக் காண் பிக்கிறேன்'' என்று அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இணையவழி வகுப்புகளில் சரியான ஓசை மற்றும் காணொலிகள் அவ்வளவாகக் கேட்பதில்லை என்று பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், தேசிய கீதத்தின்போது இணைய வழி வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு என்ன பிரச்சினை என்றுகூட கேட்காமல், 'பாரத் மாதாகி ஜே' சொல்லவில்லை என்றால், ''நீ தேசத் துரோகி,  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நீ எப்படி இந்த இடத்திற்கு வந்தாய் என்று எங்களுக்குத் தெரியும்'' என்று கூறி, இழிவுபடுத்திய அய்.அய்.டி. கான்பூர் உதவிப் பேராசிரியர் சீமா சிங்கை உடனடியாக பதவி விலகச் செய்யவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் கண் டனம் தெரிவித்ததோடு, கோரிக்கையும் விடுத்துள்ளார்.

பா... ஆட்சி மத்தியில் வந்தாலும் வந்தது. அதனுடைய சாதனைகள் என்று குறிப்பிட்டுச் சொல்ல ஏதும் இல்லாத நிலையில், மதவாதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு 'சிலம்பம் விளையாடிக்' கொண்டு இருக்கிறது.

தேர்தலுக்குமுன் நரேந்திர மோடி கொடுத்த வாக் குறுதிகள்அசாதாரணமானவை.அதேநேரத்தில், எதிர்க் கட்சியாக, குஜராத் மாநில முதலமைச்சராகவிருந்தபோதுநீட்'டை எதிர்த்தவர்தான்; ஜி.எஸ்.டி.யை எதிர்த்தவர்தான். ‘ஆதாரை' எதிர்த்தவர்தான். மத்தியில் ஆளும் கட்சி ஆனவுடன் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

கார்ப்பரேட்டுகளின் ஆட்சியாகக் கைமாறிவிட்டது. ‘ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவேன்' என்று சொன்னது எல்லாம்அரசியல் ஜூம்லா' (‘தமாஷ்') என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் சொன்னார். எப்படி இருக்கிறது!

மக்களை மடையர்கள் என்று எடை போடும் இவர் கள்தான் மத்திய ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர்.

அவர்கள் கண்ணோட்டத்தில் - செய்யப்பட்டது எல்லாம் ஆர்.எஸ்.எஸின் நிகழ்ச்சி நிரலை (அஜெண்டாவை) ஒவ்வொன்றாக அரங்கேற்றுவதுதான். தேசியக் கல்விக் கொள்கையும் அதுதான், ராமன் கோவில் கட்டுவதும் அதுதான்.

அய்.அய்.டி.யின் பேராசிரியர் தாழ்த்தப்பட்ட மாண வர்களைக் கீழ்த்தரமாகப் பேசுவதும் அந்த அடிப்படையில்தான். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதும், ஆர்.எஸ்.எஸ். கொள்கைதான். முஸ்லிம்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவதும் அந்தக் கொள்கைதான்!

இதற்கு முடிவுதான் என்ன? தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் தானே இந்த நாட்டின் வெகுமக்கள் - பெரும்பான்மையினர். இவர்கள் ஒன்றிணைந்து களம் காண்பதுதான் இந்தப் பாசிசத்துக்கான முடிவுரை என்பதை நினைவில் வையுங்கள்.

ஒன்றிடுவோம் - வென்றிடுவோம்!

Comments