அஞ்சல் நிலையங்கள் அரைநாள் மட்டுமே செயல்படும்

சென்னை, ஏப்.29 கரோனா பரவல் காரணமாக, அனைத்து அஞ்சல் நிலையங்களும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை அலுவலகம் சார்பில், அனைத்து அஞ்சல்துறைப் பிரிவு தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று 2 ஆவது அலை தீவிரமடைந்துள்ள தையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அஞ்சலகங்களிலும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இதன்படி, அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் உள்ள வாடிக் கையாளர் சேவை கவுன்ட்டர்கள் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும். இதுதொடர்பான அறிவிப்புப் பலகையை பொதுமக்கள் அறியும் வகையில், அனைத்து அஞ்சலகங் களிலும் வைக்க வேண்டும்.

விரைவு அஞ்சல்கள், பதிவு அஞ்சல்கள் மற்றும் பார்சல் சேவைகள் எவ்வித காலதாமதமும் இன்றி குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய, தேவையான ஊழியர் களையும் பணியில் ஈடுபடுத்த உரிய நடவடிக்கையை அந்தந்த அஞ்சலக அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

அதேபோல், அஞ்சலகங்களில் பணிபுரியும் மற்றும் வீடுகளில் இருந்து பணிபுரியும் ஊழியர்களின் விவரங்களை தினசரி குறித்து வைக்க வேண்டும். அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மய்யங்களில் கடவுச்சீட்டு பெற ஏற்கெனவே முன் பதிவு செய்துள்ளவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி வழங்கவேண்டும். அஞ்சலகங்களுக்கு வரும் வாடிக்கை யாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிதல், கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments