கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் இருந்தால், இறப்புச் சான்றிதழிலும் படம் இருக்க வேண்டும்

நவாப் மாலிக் வலியுறுத்தல்

புதுடில்லி, ஏப்.18 கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடி படம் இருந்தால், கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந் தவர்கள் குடும்பத்தாருக்கு வழங் கப்படும் இறப்புச் சான்றிதழிலும் அவரின் படம் இருக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மகாராட்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாள ருமான நவாப் மாலிக் செய்தி யாளர்களுக்கு நேற்று (17.4.2021) பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடி படம் இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டர் வர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடி படம் இருந்தால், கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழிலும் மோடி யின் படம் இருக்கவேண்டும்.

மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும், தடுப்பூசியை கொண்டு வந்ததற்கும் தங்களு டைய அரசு காரணம் என்ற நற்பெயரை பெறுவதற்காக தடுப் பூசி சான்றிதழில் தனது ஒளிப் படத்தை பதிவிட மோடி விரும் பினால், கரோனா உயிரிழப்புக்கும் அவர் பொறுப்பேற்று இறப்புச் சான்றிதழிலும் அவரின் படத்தை பதிவிட வேண்டும்.

நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக் கையும் , உயிரிழப்பும் பெருமளவு அதிகரித்து வருகிறது. இறுதிச் சடங்கு செய்யும் எரியூட்டு மய்யத்தில் உடல்களை எரிக்க முடியாமல் வந்து குவிவதாக காணொலிகள் வலம் வருகின்றன. தங்கள் அன்புக்குரியவர்களுக்கு இறுதி அஞ்சலிசெலுத்திவிட்டு உடலை எரியூட்ட முடியாமல் மக்கள் வரிசையில் நிற்கும் காட்சிப் பதிவுகளும் வலம் வருகின்றன.

இந்த நிலைமை ஏற்பட்டதற்கு மத்திய ரசு பதில் அளிக்க வேண் டும். இந்த சூழல் ஏற்பட்டதற்கு பதில் அளிக்காமல் மத்திய அரசு நழுவிச் செல்ல முடியாது.

Comments