தடுப்பூசி போடத் தொடங்கியதும் வழிமுறைகளை மக்கள் மறந்தனர் : எய்ம்ஸ் இயக்குநர் கருத்து

புதுடில்லி, ஏப்.18 தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியதும் கரோனா வழிமுறைகளை மக்கள் மறந்தது தொற்று உயர காரணம் என டில்லி எய்ம்ஸ் இயக்குநர் பேட்டியளித்து உள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளை எதிர் கொள்ள, முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின் பற்றுதல், கைச்சுத்தம் பராமரித்தல் ஆகிய 3 செயல்களும் கவசமாக கரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று மருத்துவ நிபு ணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக நாள் தோறும் 2 லட்சத்திற்கும் கூடுத லான கரோனா பாதிப்புகளை நாடு சந்தித்து வருகிறது.  கடந்த 10 நாட்களில் நாட்டில் கரோனா பாதிப்பு 10 லட்சம் எண்ணிக்கையை கடந்து சென்று விட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந் துள்ளது. அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளை பற்றி டில்லி எய்ம்ஸ் இயக்குநர் மருத்து வர் ரன்தீப் குலேரியா கூறும்பொ ழுது, பாதிப்பு எண்ணிக்கை உயர் வுக்கு பல காரணங்கள் உள்ளன.  ஆனால், மிக முக்கிய 2 காரணங்கள் என்னவெனில், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியதும் பாதிப்புகள் சரிவடைந்தன.

பொதுமக்கள் கரோனா தடுப் புக்கான வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றாமல் நிறுத்தி விட் டனர்.  இந்த தருணத்தில், வைர சானது திரிபடைந்து உருமாற்றம் பெற்று விட்டது.  மிக விரைவாக பரவி வருகிறது என கூறியுள்ளார்.

இந்நேரத்தில் நிறைய மதம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறு கின்றன.  தேர்தல்கள் நடந்து வரு கின்றன.  வாழ்க்கையும் முக்கியம் என நாம் புரிந்து கொள்ள வேண் டும்.  கட்டுக்கோப்புடன் அதனை நாம் மேற்கொள்ள வேண்டும்.

அதனால் மத உணர்வுகள் புண்படாமல் நடந்து கொள்ள முடியும்.  கரோனா தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின் பற்றவும் முடியும் என்று கூறியுள் ளார்.  சுகாதார கட்டமைப்பு மற் றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற் றில் கடந்த காலத்தில் செய்தவற்றை நாம் மீண்டும் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் குலேரியா கூறியுள்ளார்.

Comments