அசாம் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம்: அம்மாநில அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

 கவுகாத்தி, ஏப். 6- அசாம் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என்று அம் மாநில அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அசாமில் இன்று (6.4.2021) மூன்றாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேநேரத் தில் நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அசாமில் குறைந்தளவே பாதிப்பை ஏற் படுத்தி உள்ளது. இந்நிலை யில், அம்மாநில பாஜகவை சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா செய்தியாளர்களிடம் கூறு கையில், மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள காரணத்தால், மக்கள் யாரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை. அசாமில் பிஹு பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்கு எவ்வித தடையும் இல்லை.

அசாமில் கரோனா போய் விட்டது. ஒருவேளை கரோனா தாக்கம் இங்கு மீண்டும் அதி கரித்தால். மக்கள் அனைவரை யும் முகக்கவசம் அணிய நான் வலியுறுத்துவேன். அப்போது அவர்கள் முகக்கவசம் அணியா விட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்றார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறி வரும் நிலையில் பாஜக அமைச்சர் ஒருவர் முகக்கவ சம் அணிய தேவையில்லை என்று பேசுவது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments