கரோனா சான்று: மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ரத்து- கருநாடக அரசு அறிவிப்பு

பெங்களூரு, ஏப்.11 மைசூருவுக்கு வருபவர்களுக்கு கரோனா  இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்று மைசூரு மாவட்ட ஆட்சியர் ரோகிணி சிந்தூரி பிறப்பித்த உத்தரவை கருநாடக அரசு ரத்து செய்துள்ளது.

கருநாடகத்தில்கரோனா  வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூரு, மைசூரு, கலபுரகி, பீதர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக உள்ளது.

வைரஸ் தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மைசூரு மாவட்ட ஆட்சியர் ரோகிணி சிந்தூரி, பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு வருபவர்கள், கரோனா  இல்லை என்ற  சான்றி தழுடன் வர வேண்டும் என்பதை கட்டாயமாக்கி 8.4.2021 அன்று உத்தரவிட்டார்.

 பெங்களூருவில் இருந்து மைசூ ருவுக்கு அதிகளவில் மக்கள் சென்று வருகிறார்கள்.

மாவட்ட ஆட்சியரின் புதிய உத்தரவால் அவர்கள் கடுமை யாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

மேலும் ஆட்சியரின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்த நிலையில் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத், கரோனா  பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்றும், ஏதாவது கட்டுப்பாடுகளை விதிக்க நினைத் தால் அதுகுறித்து மாநில அரசின் தலைமை செயலாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

  இதன் மூலம் மைசூரு மாவட்ட ஆட்சியர் ரோகிணி சிந்தூரி பிறப் பித்த, கரோனா  இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Comments