லக்னோவில் இடைவிடாது எரியும் சடலங்கள்: தடுப்பு வைத்து மறைக்கும் உ.பி. சாமியார் அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 16, 2021

லக்னோவில் இடைவிடாது எரியும் சடலங்கள்: தடுப்பு வைத்து மறைக்கும் உ.பி. சாமியார் அரசு

லக்னோ, ஏப்.16 உத்தர பிரதேச மாநிலத்தில் இது வரை இல்லாத அளவிற்கு கரோனா தொற்று அதிக ரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவிய நேரத்தில், அதிகமான மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வில்லை. இதனால் அம்மாநில முதல்வர் சாமியார் யோகி ஆதித்யநாத்தை பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.

தற்போது இந்தியாவில் 2-ஆவது கட்ட கரோனா அலை ஏற்பட்டுள்ளது. கடந்த முறையைவிட தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. இந்த முறை பெரும்பாலான மாநிலங்களில் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை இல் லாத அளவிற்கு தினந்தோறும் பாதிக்கப்படும் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி யுள்ளது. மேலும் பலி எண் ணிக்கையும் அதிகரித்துள் ளது.

இதனால் உத்தர பிரதேச அரசு எந்தெந்த மாவட்டங் களில் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பாதிப்பு உள்ளதோ, அங்கெல்லாம் கட்டுப் பாடுகள் விதித்து வருகிறது.

இதற்கிடையே லக்னோ வில் உள்ள சுடுகாட்டில் எப் போதும் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிந்த வண்ணமே உள்ளது. இவை அனைத்தும் கரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் உடல்கள்தான் எனக் கூறப்படுகிறது. உடல் கள் எரியும் காட்சிப்பதிவு  சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனால் ஆடிப்போன மாவட்ட நிர்வாகம். உடல் எரிக்கப்படும் இடத்தை மறைக்கும் வகையில் தடுப்பு அமைத்துள்ளது.

இது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதி. யாருக் கும் அனுமதி இல்லை எனவும் எழுதி வைத்துள்ளது.

கரோனா வைரஸ் தொற் றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கையை அரசு அறிவிப்பதற்கும், இங்கு நடப்பதை வைத்து பார்க்கு ம்போது வித்தியாசம் வர வாய்ப் புள்ளது. இதனால்தால் அரசு இந்தத முடிவை எடுத்துள்ள தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, உண்மையை மறைப்பதற்காக நேரம் செலவிடப்படுவதில் எந்த பலனும் இல்லை. கரோனா தடுப்பு நடவடிக் கையை அரசு துரிதப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment