டில்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு

 புதுடில்லி, ஏப்.16  டில்லியில் அதிகரித்து வரும் கரோனாவை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப் பில் கூறியிருப்பதாவது: டில்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கரோனாவை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

 டில்லியில் வார இறுதி நாட்களில் செயல்பட்டு வந்த மார்க்கெட்டுகள் இனி வார நாட்களில் செயல்படும். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறன்று உணவகங்களில் விநியோக சேவைக்கு மட்டுமே அனுமதி. வார இறுதி நாள்களில் திரையரங்குகள், உணவுவிடுதிகள், வணிக வளாகங்கள் செயல்படாது.உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Comments