தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8,000-அய் நெருங்கிய கரோனா பாதிப்பு: 29 பேர் பலி

சென்னை, ஏப்.16 தமிழகத்தில் நேற்று புதிதாக 7 ஆயிரத்து 987 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் இறந்துள்ளனர்.

 தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனாத் தொற்று மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று (15.4.2021) 7,987 பேருக்கு கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 62 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 2,558 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 58,097 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 4,176 பேர் சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத் தில் கரோனாவில் இருந்து குணமடைந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 91 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குத லுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது.

Comments