வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோக குளறுபடி; ஏழு பேர் மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 21, 2021

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோக குளறுபடி; ஏழு பேர் மரணம்

விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வேலூர்,ஏப்.21- வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை வளாகத்தில்  19.4.2021 அன்று ஒருங்கிணைந்த ஆக்சி ஜன் விநியோக மய்யத்தில் கோளாறு ஏற்பட்டது. அத னால், வார்டுகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டது. கரோனா வார்டில் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கடுமையாக பாதிக் கப்பட்டனர்.

மருத்துவமனை ஊழியர்கள் மாற்று ஏற்பாடுகளை செய் வதற்குள் சிகிச்சையில் இருந்த பிரேம், செல்வராஜ், ராஜேஸ்வரி, லீலாவதி ஆகியோர் மற்றும் பொதுவார்டில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் என்பவர் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், கரோனா வார்டில் இருந்தவர் களை வேறு மருத்துவமனை களுக்கு மாற்றும் பணியில் ஈடு பட்டது. நிலைமையை சமாளிக்க வெளியில் இருந்து எடுத்து வரப் பட்ட 45 ஆக்சிஜன் சிலிண்டர் களை வார்டுகள் வாரியாக அனுப்பி வைத்தனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதும் அதை சரி செய்ய முடியாமல் ஊழி யர்கள் திணறினர். மருத்துவ மனை நிர்வாகத்தின் அலட்சி யத்தால்தான் இந்த சம்பவம் நடந்ததாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதுபற்றி தகவலறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட சுகா தாரப் பணிகள் துணை இயக்குநர் மணி வண்ணன் ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு விரைந்து வந்தனர். மருத்துவமனை டீன் செல்வி யிடம் நோயாளிகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கூறியதாவது;

கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டி ருந்த நபர்களில் 88, 55, 68, 66 வயதுள்ள நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று இல்லாமல் மற்ற வார்டு களில் சிகிச்சை பெற்று வந்த

3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர் களுக்கு உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் இருந்ததால் உயி ரிழந்துள்ளனர். இங்கு, 2 மருத் துவர்கள் உட்பட மொத்தம் 121 பேர் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக் சிஜன் தட்டுப்பாடு இருந்தால் அவர் களும் பாதிக்கப்பட்டிருப் பார்கள்.

மருத்துவமனையில் ஆக்சிஜன் விநி யோக பணிக்கான பராமரிப்புப் பணிகள் மட்டும் நடந்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப் பாடு ஏற்பட்டு யாரும் உயிரி ழக்கவில்லை. இருந்தாலும் 7 பேர் இறப்புக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தர விடப்பட்டுள்ளது. அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக் கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை. ஏற் கெனவே 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் விநியோக மய்யம் இருக்கும்போது, தட்டுப் பாடு ஏற்படாமல் இருக்க மாற்று ஏற்பாடாக சிலிண்டர்களில் தயார் நிலையில் ஆக்சிஜன் வைக் கப்பட்டுள்ளது. இங்கிருந்து எந்த நோயாளியையும் வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கவில்லை. கரோனா தொற்று இல்லாத நோயாளிகளை கோவிட் நல மருத்துவமனைகளுக்கு மாற்று வது வழக்கம். அந்தப் பணியின் ஒரு பகுதியாக நோயாளிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment