ஆயத்த ஆடை தொழில்துறைகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 21, 2021

ஆயத்த ஆடை தொழில்துறைகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக்க வேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

 சென்னை,ஏப்.21- டெக்ஸ் டைல்ஸ் மற்றும் பனியன். ஆயத்த ஆடை தொழில்துறைகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக் குமாறு வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தமிழக அரசின் தலைமைச் செய லாளருக்கு அனுப்பியுள்ள கடி தத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில், விவசாயத் தொழிலுக்கு அடுத்ததாக வேலை வாய்ப்பளிக்கும் தொழில்துறை, ஜவுளி சார்ந்த தொழில்களாகும். தற்போது மாநில அரசு அறிவித்துள்ள, 20.4.2021 அன்று  முதல் ஊரடங்கு அறிவிப்பில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் தொழில், குறிப்பாக பனியன் உற்பத்தி, ஆயத்த ஆடை உற்பத்திகள் பெரும்பகுதி ஏற்று மதி சார்ந்ததாகும். ஏற்றுமதி என் பது குறிப்பிட்ட காலத்திற்குள் பணி முடித்து அனுப்பப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, இதன் தன்மை என்பது, இரவுப் பணி செய்வதன் மூலம்தான் காலத்தில் பணிகளை முடித்து ஏற்றுமதிக்கு அனுப்ப இயலும் என்பதாகும். இதனால் இரவுப் பணி என்பது இத்தொழில் துறையில் தவிர்க்க முடியாத ஒரு அவசரத் தேவையாகவுள்ளது. ஜவுளித் தொழிலின் தன்மை இத்தகையதாக இருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே, தமிழ் நாட்டில் ஜவுளி ஆலைகள், பனியன் தொழில்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங் களுக்கு ஊரடங்கிலிருந்து விலக் களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

முகக்கவசம், சமூக இடை வெளி, இதர பாதுகாப்பு நட வடிக்கைகளை கறாராக ஏற்று அமலாக்குவதன் நிபந்தனைக ளோடு அனுமதிக்கலாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment