மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டை நிறுத்துவதா?

 மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்

புதுடில்லி,ஏப்.21- கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணி களில் ஈடுபட்டுவரும் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு  ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம்  கடந்த ஆண்டு மார்ச் 26இல் மத்திய அரசால் முதல் 90 நாள்களுக்கும், அதன் பின்னர் ஓராண்டுக்கு நீட்டித்தும் அறிவிக் கப்பட்டது. இந்நிலையில் கரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவ சுகாதாரப் பணியாளர் களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 24ஆம் தேதியுடன் மத்திய அரசு நிறுத்தியதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமை யாக விமர்சித்துள்ளார். காங் கிரஸ் மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, சுட்டுரைப் பக்கத்தில், “மத்தியஅரசுக்கு நன்றி எனும் குணமே இல்லாமல் போய்விட்டதாஎன்று கண்டித் துள்ளார்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சுட்டுரைப் பதிவில்கரோனா போர் வீரர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் வழங்கப்படும். இதற்காக நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறு வனத்துடன் பேச்சு நடத்தி வருகி றோம். இதுவரை 287 பேருக்கு காப்பீடு தொகை வழங்கப்பட் டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

Comments