மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டு : மருத்துவர்கள் கடும் கண்டனம்

 புதுடில்லி. ஏப். 21-   மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஸ் கோயல், கரோனா பரவல்ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவைகளுக்கு மாநில அரசுகளே பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

கரோனா 2ஆவது அலைவ தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய் யாமல், மாநிலங்கள் மீது பழிசுமத்தி, தனது பொறுப்புகளை தட்டிக் கழித்துள்ளது கடும் விமர்சனத் துக்குள்ளாகி உள்ளது.

இதுதொடர்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியின்போது,  கரோனா  வழக் குகள் வரம்பற்ற அளவில் தொடர்ந்து அதிகரித்தால், அது நாட்டின் சுகாதார உள்கட்டமைப் புக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளதுடன்,  நாங்கள் மாநில அரசாங்கங்களுடன் இருக்கிறோம், ஆனால் அவர்கள் எங்களது கோரிக்கையை ஏற்று, கரோனா பரவலை கட்டுப்படுத்த  உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த கருத்து தெரிவித்த கோயல்,  நாம் மருத்துவ ஆக்சிஜனை பகுத் தறிவுடன் பயன்படுத்த வேண்டும் மற்றும் அதன் விரயத்தை நிறுத்த வேண்டும் என்று கூறியதுடன்,  நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜனை மட்டுமே கொடுக்க வேண்டும்.

ஆனால், பல மருத்துவ மனைகளில்,    ஆக்சிஜன் வீணடிக்கப் படுகிறது.  நோயாளிகளுக்கு தேவையில்லை என்றாலும் அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப் படுவதாகவும் தகவல்கள் வந்துள் ளன என்று குற்றம் சாட்டியவர், இதுபோன்ற நவடடிக்கைகளை கண்காணித்து ஆக்சிஜன் பற்றாக் குறை ஏற்படுவதை தவிர்ப்பது குறித்து  கண்காணிக் குமாறு மாநில அரசுகளை வலி யுறுத்தி இருப்பதாகவும், மாநில அரசுகள் தேவையை (மருத்துவ ஆக்சிஜனுக்கான) கட் டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

ஆக்சிஜன் தேவை அதிகரித் துள்ள நிலையில், அதை தேவையை பூர்த்தி செய்வதில் மாநில அரசு திறமையாக செயல்பட வேண்டும் என்று கூறியதுடன், கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதற்கு,  அந்தந்த மாநில அரசுகளே பொறுப்பு, அவர்கள்தான், தங் களது  பொறுப்பை நிறைவேற்ற வேண்டும், கரோனா மோசமான பாதிப்புக்குள்ளான 12 மாநிலங் களுக்கு 6177 மெட்ரிக் டன் ஆக் சிஜனை வழங்கவும் மய்யம் முடிவு செய்துள்ளதாக வும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஆக்சிஜன் வீணடிப்பு என்ற பியூஸ் கோயலின் குற்றச்சாட்டுக்கு மருத்துவர்கள்  கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். எந்தவொரு நோயாளிக்கும் தேவையின்றி ஆக் சிஜன்  கொடுக்கப்படுவது இல்லை என்று தெரிவித்துள்ளதுடன், நாடு முழுவதும் நிலவிவரும்  ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற உண்மை நிலவரங்கறை மறைக்கவே, மாநில அரசுகள் மீதும் மருத்து வர்கள் மீதும்  பழி போட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.கரோனா மருந்து, கரோனா பொதுமுடக்கம்,  கரோனா தடுப்பு மருந்து  உள்பட அனைத்து விஷயங்களிலும் இது வரை மாநில அரசுகளின் கோரிக் கையை கண்டுகொள்ளாமல்,  மாநி லங்களின் தேவையை பூர்த்தி செய் யாமல், ஒருதலைப்பட்சமாக,  பெரிய அண்ணனாக செயல்பட்டு, அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி  வரும் மோடிஅரசு,

தற்போது தொற்று பரவல் தீவிரம்  அடைந்துள்ள நிலையில்,  தேவையான மருந்துகள், ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை போன்ற வற்றை சரி செய்ய முயற்சி எடுக் காமல், மாநில அரசுமீது பழியை போடுவது, மத்தியஅரசின் எதேச் சதிகார போக்கையே வெளிக் காட்டுகிறது.

Comments