மருந்தை எந்த விலைக்கும் விற்போம்

பா... தலைவரின் ஆணவம்

அகமதாபாத், ஏப். 21  கரோனா சிகிச் சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை, முறைகேடாக பயன்படுத்தியது குறித்து எழுந்த புகாருக்கு, ஆணவமாக பதிலளித்துள்ளார் குஜராத் மாநில பாஜக தலைவர்.

கரோனா தொற்றுக்கான சிகிச்சைக்கு, ரெம்டெசிவிர் மருந்து பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில், இம்மருந்தின் விலையை, தனியார் மருந்து நிறுவனங்கள் கணிசமாக குறைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் அம்மருந்து சட்டவிரோதமாக விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பட்டீலிடம் கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு அவர் மிகுந்த ஆணவத் துடன் பதிலளித்துள்ளார்.

இது எங்களின் மருந்து. நாங்கள் எதையும் செய்வோம். அதைக் கேட்பதற்கு நீங்கள் யார்?” என்று ஆணவமாக பதிலளித் துள்ளார் அவர்.

குஜராத் மாநிலத்தில், கரோனா தொற்று மிக மிக மோசமாக கையாளப்படும் நிலையில், மாநில பாஜக தலைவரின் இந்த பதில் குறித்து பலர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ரூ.7 கோடி மதிப்பிலான கரோனா தொற்று சிகிச்சைக்கான மருந்தை பதுக்கியது தொடர்பாக மகாராட்டிரா முன்னாள் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மீது மாநில அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் குஜராத் பாஜக தலைவர் மீண்டும் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments