ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சீட்டு நடைமுறையைப் பயன்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரி வித்துள்ளது சரியா?

- வே.பெருமாள்சாமி, திண்டிவனம்.

பதில்:  அவர்களின் சந்தேகங்களைப் போக்கும் அளவுக்கு தக்க ஆதாரங்களுடன் வழக்கை மீண்டும் எடுத்துத் தொடுத்தால், அவர்களுக்கும் கூட மறு சிந்தனை வரக்கூடும். தவறு நடக்க வழி இருக்கிறது என்பதை நிலை நிறுத்தும்வண்ணம் வாதங்களும், தரவுகளும் தேவை.

கேள்வி: தமிழக பிஜேபி வேட்பாளர்கள் தங் களது   விளம்பரத்தில் பிரதமர் மோடி அவர்களின் ஒளிப்படத்தை தவிர்ப்பது, தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் தன்னலமற்ற உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்று கருதலாமா?

- மணிகண்டன், மேல்மருவத்தூர்.

பதில்: நிச்சயமாக மகத்தான மாபெரும் வெற்றி!.

கேள்வி: மாநில அரசுப் பணிகளுக்குப் பணியாளர்களை இனி மத்திய அரசுதான் தேர்வு செய்யும் என்ற அதிர்ச்சித் தகவல் பற்றி எந்த ஊடகங்களும் பொது வெளியில் பேசாதது ஏன்?

- வேல்முருகன், வில்லிவாக்கம்

பதில்: தேர்தல் ஆரவாரத்தில் அதைக் கவனிக்கவில்லை. நான் எல்லாப் பொதுக் கூட்டங் களிலும் விளக்கினேன்.

நீட்' தேர்வு உத்தியோக மண்டலத்திலும் திணிக்கப்படுவதே இந்த முயற்சி. வன்மையாக கண்டித்துத் தடுக்க வேண்டும்.

கேள்வி: டில்லியில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசைவிட துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளது அரசமைப்புச் சட்டப்படி சரியா?

- கலைவாணி, மேடவாக்கம்.

பதில்: ‘ரப்பர் ஸ்டாம்ப்புகளிடம்வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

கேள்வி: 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி. 7ஆண்டுகாலம் பிஜேபி ஆட்சி.ஆனால் மோடி யும், எடப்பாடி பழனிசாமியும் தங்கள் அரசின் சாதனைகளை சொல்லி வாக்குக் கேட்க முடிய வில்லை. எதிர்க்கட்சிகளை விமர்சித்து வாக்கு கேட்கிறார்களே?

-அய்ன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி.

பதில்: பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? என்ன செய்ய!

கேள்வி: இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வடநாட்டை சேர்ந்த மார்வாடிகள் தேர்தல் பணிகளில் அதிமுக - பிஜேபி கூட்டணிக்கு ஆதரவாக தீவிரமாக ஈடுபடுகிறார்களே - இதைத் தமிழர்கள் புரிந்து கொண்டார்களா?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்.

பதில்: புரிந்து வருகிறார்கள் - தாமதமாக!

கேள்வி: தேர்தல் நேரம் என்றும் பாராமல் பிஎஃப் பணத்திற்கான வட்டியை குறைத்திருக் கிறார்களே - சரியா?

- நாராயணன், சேலையூர்

பதில்: அதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் தேர்தல் ஞாபகம் வந்த காரணத்தால்!

கேள்வி: ஒரு சில ஊர்களில் வாக்குக் கேட்டு வரும் வேட்பாளர்களை  மக்கள் தங்கள் பகுதியில் நுழைய விடாமல்  திருப்பி அனுப்புவது ஜனநாயக ரீதியாக சரியா?

- தமிழ்ச்செல்வன்,  ஆவடி

பதில்: மக்கள் - வாக்காளர்களின் அதிருப்தி, வெறுப்பை வெளியிட அதுதானே சரியான வழி!

கேள்வி: இந்து சமய அறநிலையத்துறையை அழிக்கும் முயற்சியில் சிலர் மக்கள் ஆதரவைமிஸ்டுகாலில்பெற முயற்சி செய்கிறார்களே- இந்து சமய அறநிலையத்துறையின் அவசியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் என்னென்ன முயற்சிகளை செய்ய வேண்டும்?

- செ.பாக்யா, பொன்னமராவதி.


பதில்: பெரும் அளவில் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதில் புதைந்துள்ள பார்ப்பனர் சூழ்ச்சியைப் புரிய வைக்க தீவிரப் பிரச்சாரம் தேவை! தேவை!

Comments