செங்கல் என்பது கூடவா தமிழிசை சவுந்திர ராஜனுக்குத் தெரியாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

செங்கல் என்பது கூடவா தமிழிசை சவுந்திர ராஜனுக்குத் தெரியாது

தொடர்ந்து அதி.மு.. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கோமாளிக்கணக்கு போட்டு விளம் பரம் வெளியிட்டுக்கொண்டே வந்தது, நீட், எய்ம்ஸ், என பல விளம்பரங்களைப் போட்டுவந்தது, இந்த நிலையில் தி.மு.. அவர்களின் விளம்பரங்க ளையே நையாண்டி செய்து முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ளார்கள். இந்த விளம்பரத்தில் முக்கிய மானது செங்கல், 2017 ஆம் ஆண்டு மோடியால் மதுரையில் அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தில் இன்றுவரை 4 செங்கல் மட்டுமே உள் ளது. அதாவது மோடி எடுத்துக்கொடுத்த செங்கல் மட்டுமே அங்கு உள்ளது, சமீபத்தில் கூட தி.மு.. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி வேட்பாளர் உதய நிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை வைத்துக்கொண்டு இதோ எய்ம்ஸ் மருத்துவமனையை உங்கள் முன் கொண்டுவந்தேன் என்று கூறி அதி.மு.. தலைமை  மற்றும் மோடி இருவரையுமே நையாண்டி செய்திருந்தார். இந்த தேர்தலில் மதுரை எய்ம்ஸ் செங்கல் பெரும் விவாதப்பொருள் ஆகி உள்ளது. தி.மு.. வெளியிட்ட விளம்பரத்தின் மய்யத்தில் செங்கல் வைத்து அதில் மூன்று பட்டை போட்டு கோலம் வரைந்திருந்த படம் வெளியானது, 

இதைப் பார்த்த தமிழிசை அந்த செங்கல் உண்மையிலேயே மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையின் படம் என்று நினைத்து பாஜக வின் சாதனை என்ற பெயரில் சமூகவலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். ஒரு மாநில ஆளுநர் கட்சி ஆதரவு எடுப்பது தவறான நடவடிக்கை ஆகும். அதுவும் நையாண்டிக்காக வரையப்பட்ட ஒரு செங்கல்லை உண்மையான எய்ம்ஸ் மருத் துவமனை என்று நினைத்து சுட்டுரைப் பதிவை வெளியிட்ட தமிழிசை சவுந்தர ராஜனின் செயல் கண்டிக்கப் படவேண்டியது, இந்த நிலையில் அது செங்கல் என்று தாமதமாக தெரிந்து கொண்ட பிறகு அந்த பதிவை அழித்து(டிலிட்) விட்டார்,

ஆனால் அவர் அழிக்கும் முன்பே அந்தப் பதிவு அதிகம் பரவி விட்டது, அனைவரும் செங் கல்லுக்கும் கட்டிடத்திற்கும் வித்தியாசம் தெரியாத வராக உள்ளாரே என்றும் தெலுங்கானா ஆளுந ராக சென்ற பிறகு உலகத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாதவராக இருந்துள்ளாரே எனவும் ஏளனம் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment