செய்தியும், சிந்தனையும்....!

எங்களப்பன் குதிருக்குள் இல்லை!'

*           நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது - தேர்தலுக்கும், இந்த விருதுக்கும் சம்பந்தம் இல்லை.

- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

>>           இதை ஏன் இவர் இப்பொழுது சொல்ல வேண்டும்?

யாருக்குப் பயன்?

*           மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.23 லட்சம் கோடி - புதிய சாதனை.

>>           வசூல்தான் - மாநிலத்துக்கு உரியது வந்து சேராதே!

கோவில் பூனைகள் ஜாக்கிரதை!

*           பொதுத் துறை தேர்வு வாரியத்தின் தலைவராக தனியார்த் துறையில் தலைவராக உள்ள மல்லிகா சீனிவாசன் நியமனம்!

>>           இவர் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மனைவி - புரிகிறதா?

கொச்சைப்படுத்த வேண்டாமே!

*           ஜல்லிக்கட்டு கதாநாயகர் - பிரதமர் மோடி.

- துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

>>           பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தை இதைவிட எப்படி கொச்சைப் படுத்த முடியும்?

தறுதலைகள்

*           கருணை அடிப்படையில் வேலை கிடைத்த பின் தாயைத் தவிக்கவிட்ட மகன் சம்பளத்தில் பிடித்தம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

>>           தாயில்லாமல் நீ இல்லை.

திலகர் கணக்குபோல ராமன் கணக்கா?!

*           தமிழகத்திலிருந்து ராமன் கோவிலுக்கு ரூ.120 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது.

- .பி. முதலமைச்சர் ஆதித்யநாத்

>>           இதற்கெல்லாம் ஏதாவது கணக்கு ‘‘வழக்கு''(?) உண்டா?

மாதா - பிதா!

*           பெண் கல்வி இலவசமாக வேண்டும்

- வி.அய்.டி. வேந்தர் விசுவநாதன்

>>           பாரத மாதா' என்றெல்லாம் அன்னையைப் போற்றுவோர் பார்வைக்கு!

ஜாடை மாடைப் பேச்சு!

*           ஊடுருவல்காரர்களின் கூடாரம் ஆகாது அசாம்.

- உள்துறை அமைச்சர் அமித்ஷா

>>           யார் ஊடுருவல்காரர்கள்? இந்தியாவிற்குள் கைபர் கணவாய் வழியாக ஊடுருவியவர்கள் யார்?

பழையதைக் கிண்டினால் - கிண்டியவர்களுக்குத் தான் ஆபத்து!

ஒட்டகத்தைப் பழிக்கிறது ஓணான்!

*           பெண்களை இழிவுபடுத்தும் காங்கிரஸ் - தி.மு.. கூட்டணி.

- பிரதமர் பேச்சு

>>           ஆர்.எஸ்.எஸில் பெண்களைச் சேர்ப் பதுண்டா என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.

கடவுளானாலும்...

*           திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் குறைப்பு.

>>           கையில் காசில்லாதவன் கடவுளே யானாலும்...?

ரூபாய் இருந்தால் ஈஸ்வரன்தானே!

*           அசாம் சட்டமன்றத் தேர்தலில் 265 கோடீஸ்வரர்கள் போட்டி!

>>           நாட்டில் நடப்பது கார்ப்பரேட்டுகளின் ஆட்சிதானே - எல்லாம் நடக்கும்.

ஸ்கேனிங் ரிப்போர்ட்

*           எத்தனை முறை தமிழ்நாட்டுக்குப் பிரதமர் மோடி வருகிறாரோ அந்த அளவுக்குப் பா...வுக்கு வாக்குகள் குறையும்.

- தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின்           

>>           சபாஷ், சரியான படப்பிடிப்பு!

'உன்னாவ்'  நினைவிருக்கிறதா?

*           .பி. முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் விருதுநகர், ராமேசுவரத்தில் தேர்தல் பிரச்சாரம்.

>>           ..பி.யில் இவர் ஆட்சியில்தான் உன்னாவ் என்னும் ஊரில் உதவி கேட்கச் சென்ற பெண்ணை தானும், தனது சகோதரனும் பாலியல் வன்கொடுமை செய்த பா... எம்.எல்.. ‘பிரமாதமாக' இருக்கிறார்.

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

*         தமிழகம் மின் மிகை மாநிலம் என, .தி.மு..வினர் பீற்றுகின்றனர். அப்படியானால் நம் தேவைக்குப் போக, பிற மாநிலங்களுக்கு விற்கவேண்டும்; அவ்வாறு விற்கப்படுவதில்லை. நம் தேவைக்கே 50 சதவிகிதம்தான் உற்பத்தி யாகிறது. மீதி 50 சதவிகிதம், பிற மாநிலங் களிலிருந்து வாங்கப்படுவதுதான் உண்மை.

- .சிதம்பரம், மேனாள் மத்திய நிதியமைச்சர்

>>           இது ஒரு மின் அதிர்ச்சியான (ஷாக்) தகவல்.

Comments