பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை ஏன் பெயர் மாற்றம்? யாரை திருப்தி செய்ய? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை ஏன் பெயர் மாற்றம்? யாரை திருப்தி செய்ய?

தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை ஓராண்டு விழாவாக - தொடர் விழாவாக நடத்திய எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த .தி.மு.. அரசு 1979 இல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘‘பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை'' என்று பெயர் மாற்ற மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு மாற்ற அரசு ஆணை பிறப்பித்தார். அதனை இப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு - நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில் - ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு'' என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்?

யாரைத் திருப்தி செய்ய? என்ன பின்னணி - விஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு?

அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

உடனடியாக அதை இணைய தளத்தில் இருந்து நீக்கி, ‘‘பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை'' என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

13.4.2021

No comments:

Post a Comment