குரானின் குறிப்பிட்ட வசனங்களை நீக்கக்கோரும் மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி மற்றும் அபராதம் விதிப்பு

 புதுடில்லி,ஏப். 13 இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் மீது வன்முறையை தூண்டும் குரானின் குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டுமென்று, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநில வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் சையது வாசிம் ரிஸ்வி, இந்த மனுவை தாக்கல் செய்தார். ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி, தள்ளுபடி செய்து விட்டது உச்சநீதிமன்றம். நீதிபதி ஆர்எஃப் நரிமன் தலைமையிலான அமர்வுதான் இதை விசா ரித்தது.

ரிஸ்வியின் வழக்குரைஞர் ரெய் சாதா நீதிமன்றத்தில், குரானின் குறிப்பிட்ட வசனங்கள், முஸ்லீம் அல்லாதோர் மீது வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது. அவற்றின் விளக்கங்கள் அப்படித்தான் உள்ளன.  எனவே, இந்த விளக்கத்தை, மதரசா கல்வியில் கற்றுத் தருகையில் பிரச்சினைகள் எழும் என்றார்.

மேலும், அந்த வசனங்களின் விளக்கத்தை, வரிக்கு வரி கற்றுத் தருவதை நிறுத்தும் வகையில், மத்திய அரசு மற்றும் மதரசா வாரியங்கள் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்த மனுவில் கேட்கப்பட் டிருந்தது. ஆனால், இம் மனுவை தள் ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ரூ.50,000 அபராதமும் விதித்தது.

Comments